தொழில்நுட்பம்

Motorola இன் புதிய Emergency Satellite service

Published

on

Motorola இன் புதிய Emergency Satellite service

Motorola இன் புதிய Emergency Satellite service

iPhone 14 series கடந்த வருடம் அறிமுகப்படுத்தியிருந்தார்கள். iPhone 14 கூடவே Emergency Satellite என்ற ஒரு வசதியையும் புதிதாக அறிமுகப்படுத்தியிருந்தார்கள். எங்காவது அடர்ந்த காடுகள், கடற்பயணங்கள் போன்ற இணைய அல்லது தொலைபேசி இணைப்பு கிடைக்காத இடங்களில் இருந்து தகவல்களை அனுப்ப வசதியாக இருந்தது. இது பல தரப்பட்ட மக்களுக்கு உபயோகமான ஒரு வசதியாக இருந்தது.

சாதாரண ஒருவர் இந்த வசதியை பயன்படுத்த வேண்டுமாக இருந்தால் iPhone 14 series ஒன்றினை வாங்கவேண்டிய கட்டாயம் இருந்தது. இந்தப்பிரச்சனை சரிசெய்ய Motorola ஒரு புதிய சாதனத்தை உருவாக்க இருப்பதாக கடந்த வருடம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருந்தார்கள். இந்த அறிவிப்பானது இணையவாசிகளில் பலநாட்கள் பேசுபொருளாக இருந்தது. அவர்கள் அறிவித்தது போலவே ஒரு சிறிய சாதனம் ஒன்றினை சந்தைப்படுத்தியிருக்கின்றார்கள்.

ஒரு சிறிய modem போன்று காட்சியளிக்கும் இதனை இலகுவாக சாவிகளுடன் எடுத்துச்செல்லக்கூடியதாக இருக்கும். இந்த modem போன்ற சாதனத்தின் உதவியுடன் இணைய இணைப்பு மற்றும் தொலைபேசி இணைப்பு இல்லாத இடங்களில் இருந்தும் உங்களால் Satellite மூலமாக தவல்களை அனுப்பிக்கொள்ள முடியும். இதற்காக Motorola Bullitt என்ற Satellite Service Provider உடன் ஒப்பந்தம் செய்து இருக்கின்றார்கள்.

இந்த modem $150 இற்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது அத்துடன் இதனை பயன்படுத்துவதற்கு மாதாந்தம் பணம் செலுத்தியாக வேண்டும். உங்களுடைய தேவையை பொறுத்து உங்களுக்கான திட்டத்தை தெரிவுசெய்துகொள்ள முடியும்.

இதனை iOS மற்றும் android இயங்குதளங்கில் பயன்படுத்த முடியும் அதற்கு அவர்களுடைய mobile application இனை உங்களுடைய தொலைபேசியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version