தொழில்நுட்பம்

டுவிட்டர் பயனாளர்களுக்கு அதிர்ச்சித்தகவல்.!!

Published

on

டுவிட்டர் பயனாளர்களுக்கு அதிர்ச்சித்தகவல்.!!

பிரபல micro-bloggingதளமான டுவிட்டர் (விரைவான கருத்துப்பரிமாற்றம் மற்றும் கருத்து உருவாக்கம் ஆகியவற்றின் கலவையாகும். micro-blogging மூலம்,நிகழ்நிலையில் பார்வையாளர்களுடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முடியும்.) தன்பயனார்களுக்கு தினம் தினம் புதிய வசதிகளை  அறிமுகப்படுத்துவதோடு அதிர்ச்சியூட்டும் விடயங்களையும் அறிமுகம் செய்கின்றது.

Twitter நிறுவனத்தை Elon Musk வாங்கிய பிறகு அதுவரை காலமும் இருந்த பாரம்பரிய டுவிட்டர் வசதிகளை மேருகேற்றியதுடன், புதிதாக பல வசதிகளை அறிமுகம் செய்துகொண்டு இருக்கின்றார். இதுவரை காலமும் celebrities, businessman, politics related persons, companies என்பவற்றுக்கு வழங்கப்பட்டு வந்த verified blue-tick, இன்று அனைவரும் மாதாந்த சந்தா செலுத்திப்பெற்றுக்கொள்ள முடியும் என்ற மாற்றத்தை கொண்டுவந்தார். மாதாந்தம் 8$ – 11$ செலுத்திபெற்றுக்கொள்ள முடியும்.

நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த Elon Musk, டுவிட்டர் பயன்படுத்தும் அளவினை கட்டுப்படுத்தப்போவதாக அறிவித்து இருந்தார்.

பயனர் தரவுகளை கையாளுதலின் தீவிர நிலையினை கட்டுப்படுத்த தற்காலிக வரையறைகளை செயற்படுத்தப்போவதாக கூறியிருந்தார்.

1. Verified செய்யப்பட்ட கணக்குகள் நாள் ஒன்றிற்கு 6000 டுவிட்களை பார்வையிட முடியும்
2. Verified செய்யப்படாத கணக்குகள் நாள் ஒன்றிற்கு 600 டுவிட்களை பார்வையிட முடியும்.
3. புதிதாக திறக்கப்பட்ட verified செய்யாத கணக்குகள் நாள் ஒன்றிற்கு 300 டுவிட்களை பார்வையிட முடியும்.

இந்த அறிவிப்பிற்கு டுவிட்டர்வாசிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளதுடன் இதற்கு ஆதரவாகவும்,எதிராக பலர் பலவிதமான கருத்துக்களை முன்வைத்தமுள்ளனர். இந்த அறிவிப்பானது அனைவரையும் verified கணக்கான மற்றுவதற்கான செயல் என்று டுவிட்டர் பயனாளர்கள் கருத்துத்தெரிவிக்கின்றனர்.

1 Comment

  1. Banujan singam

    ஆடி 3, 2023 at 3:20 முப

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version