தொழில்நுட்பம்

நீங்கள் YouTube இற்கு Ads Blocker பயன்படுத்துபவரா ?

Published

on

நீங்கள் YouTube இற்கு Ads Blocker பயன்படுத்துபவரா ?

YouTube அறிமுகப்படுத்தவுள்ள புதிய Update!!

வலைத்தளங்கள் என்றால் விளம்பரங்கள் என்பது சாதாரண விடயம் தான். நாம் பார்வையிடும் விளம்பரங்கள் மூலமாக படைப்பாளிகளிக்கு பணம் கிடைக்கின்றது ஆனால் தொல்லை தரும், விரும்பத்தகாத விளம்பரங்களை தவிர்ப்பது நல்லது. அதற்காக பெரும்பாலானவர்கள் Ads Blocker இனை பயன்படுத்துகின்றார்கள்.

YouTube என்பது கானோளிகளை பார்வையிடுவதற்கான வலைத்தளமாகும். இங்கு பலதுறைப்பட்ட பல்வேறு கானொளிகளை பார்வையிட முடியும் எண்ணிடவிட முடியாத அளவிற்கு படைப்பாளிகளை கொண்ட தளமாகும். அத்துடன் படைப்பாளிகள் தங்களுடைய ஆக்கங்கள் மூலமாக பணம் சம்பாதித்துக்கொள்கின்றார்கள். அவர்களுக்கான பணம் அவர்களுடைய கானொளிகளில் காட்சிப்படுத்தப்படும் விளம்பரங்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றது இவ்வாறு இருக்கும் போது பார்வையாளர்கள் Ads Blocker இனை பயன்படுத்தி, விளம்பரங்களை தவிர்ப்பதால் படைப்பாளிக்கு சேர வேண்டிய ஊதியம் சேராமல் போய்விடுகின்றது.

பயனர் ஒருவர் Ads Blocker பயன்படுத்தி கானோளி ஒன்றினை பார்வையிடும் போது YouTube algorithm அதனை views மற்றும் watching hours ஆக ஏற்றுக்கொள்ளாது நிராகரித்துவிடும் இதன் காரணமாக படைப்பாளிகள் பாதிப்படைகின்றார்கள். இதனை கருத்திற்கொண்டு படைப்பாளிகளின் நலனை பாதுகாக்கும் பொருட்டு YouTube Ads Blockers இனை கட்டுப்படுத்தும் ஒரு feature ஒன்றில் வேலைசெய்துகொண்டு இருக்கின்றார்கள்.

YouTube தளத்திற்கு சென்று, உங்களால் Ads Blocker Enable செய்யப்பட்டு இருக்கும் போதும் கானொளிகளை பார்வையிட முடியும் ஆனால் கானோளி எண்ணிக்கை மற்றும் பார்வையிடும் நேரம் என்பவற்றை மட்டுப்படுத்தப்போவதாக அறிவித்து இருக்கின்றார்கள். அதாவது Ads Blocker Enable செய்யப்பட்டு இருக்கும் போது 3 கானொளிகளை பார்வையிட முடியும் அதற்கு மேல் பார்வையிட Ads Blocker Disable செய்யப்பட்டு விளம்பரங்களை பார்வையிட்டாக வேண்டும்.

புதிய YouTube Update ஒருசில மாதங்களுக்குள் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version