தொழில்நுட்பம்

டெலிகிராம் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Published

on

டெலிகிராம் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

உலகளவில் சுமார் 700 மில்லியினுக்கும் அதிகமான பயனாளர்களை கொண்டுள்ளது டெலிகிராம் செயலி.

இதன் தனித்துவமான சில அம்சங்களும் பயனரின் தனியுரிமையை பேணும் வகையில் அமைந்துள்ளதால் அதிகளவில் பயனாளர்களை ஈர்த்துள்ளது. அந்த வகையில் டெலிகிராம் தற்போது புதியதொரு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

டெலிகிராமில் விரைவில் ஸ்டோரிஸ்/ஸ்டேடஸ் (stories/status) பதிவிடும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக அதன் நிறுவனர் துரோவ் அறிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பயனர்களின் அதிக விருப்பமுள்ள தேர்வு Stories Share செய்வது. அது வாட்ஸ் ஆப்-ஆக இருந்தால் ஸ்டேட்டஸ் (status) வடிவத்திலும், இன்ஸ்டாகிராமாக அல்லது பேஸ்புக் ஆக இருந்தால் ஸ்டோரி (Story) வடிவத்திலும் இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக போட்டி களத்தில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என டெலிகிராமும் இறங்கியுள்ளது.

இதன்படி செய்தியிடல் செயலியான டெலிகிராம் விரைவில் ஸ்டோரிகளை அறிமுகப்படுத்தும் என்று அதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் அறிவித்துள்ளார்.

இந்த சேவை தற்போது சோதனைக்கட்டத்தில் இருப்பதாகவும், அடுத்தமாதம் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார். அதோடு துரோவ் தனது டெலிகிராம் சேனலில், Stories தொடர்பாகவே அதிக கோரிக்கைகள் வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த அம்சம் குறித்து தெரிவிக்கப்படுவதாவது, டெலிகிராமில் அறிமுகப்படுத்த உள்ள ஸ்டோரிஸ் பகுதி புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் வசதிகளை கொண்டிருக்கும்.

அதோடு முன் மற்றும் பின்பக்க கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒரே நேரத்தில் பதிவேற்றம் செய்யும் வசதி என வாட்ஸ் ஆப், பேஸ் புக், இன்ஸ்டாவுக்கு கடுமையாக போட்டியை கொடுக்கும் வகையில் டெலிகிராம் தயாராகியுள்ளது.

இதுமட்டுமல்லாது ஸ்டோரிஸ் காலாவாதியாகும் நேரம் 6,12,24 மற்றும் 48 மணி நேரம் அல்லது நிரந்தரமாக வைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு டெலிகிராம் அறிமுகம் செய்யும் வசதிகளுக்கு பயனர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version