தொழில்நுட்பம்

ஒரே சமயத்தில் நான்கு சாதனங்களில் பயன்படுத்தலாம்!

Published

on

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்கள் எளிதில் சாதனங்களுடன் இணைத்துக் கொள்ளும் வசதியை ஏற்கனவே வழங்கி வருகிறது. தற்போது வாட்ஸ்அப்-இன் தாய் நிறுவனமான மெட்டா, விண்டோஸ் தளத்திற்கென உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய செயலியை உருவாக்கி இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

விண்டோஸ் டெஸ்க்டாப்-க்கான புதிய வாட்ஸ்அப் ஆப் அதன் மொபைல் செயலியை போன்றதாகும். இது வாட்ஸ்அப் சேவையின் அதிவேக அனுபவத்தை கூடுதல் சாதனங்களில் வழங்குகிறது. இதுதவிர பயனர்கள் அதிகபட்சம் நான்கு சாதனங்களில் தங்களின் அக்கவுண்ட்-ஐ லின்க் செய்து கொள்ளலாம் என வாட்ஸ்அப் அறிவித்து இருக்கிறது.

இவ்வாறு செய்தபின் பயனர்களின் அக்கவுண்ட் சின்க் செய்யப்பட்டு இருக்கும். இப்படி செய்யும் போது போன் ஆஃப்லைனில் இருக்கும் போதிலும் சேவை சீராகவே இயங்கும். விண்டோஸ் டெஸ்க்டாப்-இல் வாட்ஸ்அப் ஆப்-ஐ அப்டேட் செய்த பின் பயனர்கள் புதிய அம்சங்களை பயன்படுத்த தொடங்கலாம்.

இதில் வீடியோ, வாய்ஸ் காலிங் வசதி உள்ளிட்டவை அடங்கும். “சார்ஜர் இல்லையா, பிரச்சினையே இல்லை. இனி உங்களின் வாட்ஸ்அப்-ஐ அதிகபட்சம் நான்கு சாதனங்களுடன் லின்க் செய்து கொண்டு ஸ்மார்ட்போன் ஆஃப் ஆன பின்பும் சாட்களுடன் எந்நேரமும் சின்க், என்க்ரிப்ட் செய்யப்பட்ட நிலையில் தொடர முடியும்,” என வாட்ஸ்அப் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறது.

பல்வேறு சாதனங்களில் வாட்ஸ்அப் லின்க் செய்வது எப்படி?

– மொபைல் போன் நம்பர் லின்க் செய்யப்பட்டு இருக்கும் சாதனத்தில் வாட்ஸ்அப்-ஐ திறக்க வேண்டும்.

– சாதனத்தில் செட்டிங்ஸ் (Settings) — லின்க்டு டிவைசஸ் (Linked Devices) ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.

– இனி லின்க் எ நியூ டிவைஸ் (Link a new device) ஆப்ஷனை கிளிக் செய்து திரையில் வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

– விண்டோஸ் டெஸ்க்டாப்-இல் இரண்டாவது சாதனத்தை லின்க் செய்ய, வாட்ஸ்அப் வெப் வலைத்தளத்தை பிரவுசரில் திறக்க வேண்டும்.

– இரண்டாவது சாதனத்தில் இருந்தபடி வலைத்தளத்தில் தெரியும் கியூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்ய வேண்டும்.

– சாதனங்கள் சின்க் ஆகும் வரை காத்திருக்க வேண்டும். உங்களின் சாட்கள் இரண்டாவது சாதனத்தில் தெரியும்.

– இதே வழிமுறைகளை கொண்டு மேலும் அதிக சாதனங்களில் வாட்ஸ்அப்-ஐ லின்க் செய்ய முடியும். அதிகபட்சம் நான்கு சாதனங்களில் உங்களின் வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ லின்க் செய்ய முடியும்.

இணைய இணைப்பில் இருக்கும் வரை உங்களின் வாட்ஸ்அப் அக்வுண்ட் கனெக்ட் செய்யப்பட்டு இருக்கும். விரும்பாத பட்சத்திலோ அல்லது தேவையில்லாத சமயத்திலோ என்று எப்போது வேண்டுமானாலும், எந்த சாதனத்தில் இருந்தும் வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ அன்-லின்க் செய்து விடலாம்.

#technology

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version