தொழில்நுட்பம்

லோகோவை மாற்றியது நோக்கியா

Published

on

நோக்கியா நிறுவனத்தின் 60 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக தனது பிராண்டு அடையாளத்தை மாற்ற முடிவு செய்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து நோக்கியாவின் புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டெலிகாம் உபகரணங்கள் உற்பத்தியாளர் பிரிவில் தொடர் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில், நோக்கியா இந்த முடிவை எடுத்துள்ளது.

புதிய லோகோ ஐந்து வெவ்வேறு வடிவங்கள் இணைந்து நோக்கியா எனும் வார்த்தையை பிரதிபலிக்கிறது. பாரம்பரியம் மிக்க புளூ நிற பழைய லோகோவுக்கு மாற்றாக புதிய லோகோவில் தேவைக்கு ஏற்ப அதிக நிறங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. “ஸ்மார்ட்போன்களிடம் அதிக ஒருங்கிணைப்பு இருந்து வந்தது, எனினும், தற்போதைய காலக்கட்டத்தில் நாங்கள் வியாபார தொழில்நுட்ப நிறுவனம்,” என தலைமை அதிகாரி பெக்கா லுண்ட்மார்க் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2023 (MWC) நிகழ்வை ஒட்டி பெக்கா லுண்ட்மார்க் இந்த தகவலை தெரிவித்தார். 2020 ஆண்டு வாக்கில் தடுமாற்றத்தில் இருந்துவந்த நிறுவனத்திற்கு தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்ட லுண்ட்மார்க் ரிசெட், அக்செல்லரேட் மற்றும் ஸ்கேல் என மூன்று நிலைகள் அடங்கிய வியூகத்தை வகுத்து நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார். இவற்றில் ரிசெட் நிலை முடிவுக்கு வருவதை அடுத்து, இரண்டாம் கட்ட பணிகள் துவங்கி இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

தற்போது சேவை வழங்கும் வியாபார பிரிவில் டெலிகாம் நிறுவனங்களுக்கு உபகரணங்களை வினியோகம் செய்து வரும் நோக்கியா, தொடர்ந்து வியாபாரங்களுக்கு உபகரணங்களை விற்பனை செய்வதில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

#technology #world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version