தொழில்நுட்பம்

‘வாட்ஸ்அப்’ செயலியில் வெளியாகிறது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம்

Published

on

அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை மீட்க செய்யும் வசதியை வாட்ஸ்அப் சோதனை செய்து வருகிறது. தற்போது இந்த அம்சம் “Accidental Delete” எனும் பெயரில் வாட்ஸ்அப் ஸ்டேபில் வெர்ஷன்களில் வழங்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.

நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம், ஏற்கனவே “delete for me” ஆப்ஷனை தேர்வு செய்யும் போது, நீங்கள் அழித்த குறுந்தகவல் அனுப்பியவருக்கு தெரியும் வகையில் வழங்கப்பட்டு இருந்தது.

“delete for everyone” அம்சம் அனுப்பியவருக்கும், அதனை பெற்றவருக்கும் குறுந்தகவலை அழித்து விடும். இவை தவிர குறுந்தகவல்களை அழிக்க வாட்ஸ்அப் வேறு எந்த வசதியையும் வழங்கவில்லை. இதன் காரணமாக க்ரூப்களில் குறுந்தகவல் அனுப்பியவருக்கு சங்கடமாக இருந்து வந்தது.

தற்போது புது அப்டேட் மூலம், “delete for me” ஆப்ஷனை க்ளிக் செய்தால், அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை Undo செய்யலாம். குறுந்தகவலை “delete for me” ஆப்ஷன் மூலம் அழித்து இருந்தால், வாட்ஸ்அப் திரையின் கீழ்புறம் உள்ள undo ஆப்ஷன் மூலம் அதனை திரும்ப பெற முடியும்.

இந்த வழிமுறையை மேற்கொள்ள ஐந்து நொடிகள் வரை வழங்கப்படும். இந்த அம்சம் சீராக இயங்க குறுந்தகவல் அனுப்பியவர் மற்றும், அதனை பெற்றவர் வாட்ஸ்அப்-இன் புது வெர்ஷனை பயன்படுத்த வேண்டும்.

#technology

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version