தொழில்நுட்பம்

எலான் அதிரடி! – ஊழியர்களையும் பணி நீக்கம் செய்ய திட்டம்

Published

on

டுவிட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் வாங்கினார். அந் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார்.

இந்தநிலையில் டுவிட்டர் நிர்வாகத்தில் எலான் மஸ்க் அடுத்த அதிரடியில் இறங்கியுள்ளார். அவர் ஊழியர்களை குறைக்க முடிவு செய்துள்ளார். வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட வேண்டிய பணியாளர்கள் பட்டியலை அளிக்க மேலதிகாரிகளுக்கு எலான் மஸ்க் உத்தரவிட்டு உள்ளதாக நியூயார்க் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

வருகிற 1ம் தேதிக்குள் ஆள்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்படும் என்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை 75 சதவீதம் அளவுக்கு குறைத்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மூன்று ஆண்டுகளில் டுவிட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

டுவிட்டரில் தற்போது 7500 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அந்த எண்ணிக்கை ஆள்குறைப்பு நடவடிக்கை மூலம் 2 ஆயிரமாக குறைக்கப்படும். இதற்கிடையே டுவிட்டருக்கு மாற்றாக புதிய செயலியை விரைவில் அறிமுகப்படுத்த டுவிட்டரின் முன்னணி தலைமை நிர்வாக அதிகாரி ஷாக் டோர்சி திட்டமிட்டுள்ளார். புளூஸ்கை என்ற பெயரில் ஒரு சமூக வலைதளத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#technology #twitter

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version