தொழில்நுட்பம்

புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த லாவா நிறுவனம்!

Published

on

லாவா நிறுவனம் பிளேஸ் சீரிசில் புது ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது.

விரைவில் லாவா பிராண்டு ஸ்மார்ட்போன்களுக்கு கார்திக் ஆர்யன் விளம்பரப்படுத்தும் பிரச்சாரம் துவங்கும் என்றும் லாவா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

புதிய லாவா பிளேஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் கிளாஸ் கோல்டு, கிளாஸ் கிரீன், கிளாஸ் புளூ மற்றும் கிளாஸ் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது.

இதன் இந்திய விலை ரூ. 10 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் லாவா வலைதளங்களில் நடைபெறுகிறது.

அம்சங்கள்

  • 6.51 இன்ச் 1600×720 பிக்சல் வளைந்த ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே
  • 90Hz ரிப்ரெஷ் ரேட்
  • ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர்
  • IMG பவர் VR GE8320 GPU
  • 4 ஜிபி ரேம்
  • 64 ஜிபி மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • ஆண்ட்ராய்டு 12
  • டூயல் சிம் ஸ்லாட்
  • 50MP பிரைமரி கேமரா
  • டெப்த் சென்சார், மேக்ரோ கேமரா, எல்இடி பிளாஷ்
  • 8MP செல்பி கேமரா
  • பக்கவாட்டில் கைரேகை சென்சார்
  • 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
  • 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
  • யுஎஸ்பி டைப் சி
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி

#Technology  #smartphone

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version