தொழில்நுட்பம்

சார்ஜர் இல்லாமல் ஐபோன் விற்பனை செய்ய கூடாது! எச்சரிக்கும் பிரேசில் அரசாங்கம்

Published

on

பிரேசில் நாட்டு அரசாங்கம் சார்ஜர் இல்லாமல் ஐபோன்களை விற்பனை செய்யக்கூடாது என ஆப்பிள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனத்திற்கு 2.38 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்து இருப்பதோடு சார்ஜர் இல்லாமல் ஐபோன் 12 மற்றும் அதற்கு பின் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்களின் விற்பனையை நடத்தக் கூடாது என பிரேசில் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

மிகவும் அத்தியாவசியமான சாதனம் இன்றி ஐபோன் விற்பனை செய்யப்பட்டு வந்தது என அந்நாட்டு அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சார்ஜர் இல்லாமல் ஐபோன் விற்பனை செய்வதால் காற்று மாசு குறைக்கப்படுவதாக கூறும் ஆப்பிள் கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என பிரேசில் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சார்ஜர் இல்லாமல் ஸ்மார்ட்போன் விற்பனை செய்வதால் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு என்பதை உணர்த்தவும் எந்த ஆதாரமும் இல்லை என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இது பற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#Iphone #apple

Exit mobile version