தொழில்நுட்பம்

அசத்தலான அம்சங்களுடன் நோக்கியா லேப்டாப் மாடல்கள் அறிமுகம்

Published

on

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நடைபெற்று வரும் 2022 ஐஎப்ஏ நிகழ்வில் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா பியுர்புக் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

பியுர்புக் சீரிசில் மொத்தம் மூன்று லேப்டாப்கள் அறிமுகமாகி இருக்கின்றன.

இவை நோக்கியா பியுர்புக் போல்டு, நோக்கியா பியுர்புக் லைட் மற்றும் நோக்கியா பியுர்புக் ப்ரோ என அழைக்கப்படுகின்றன.

இதில் பல சிறப்பம்சங்கள் உள்ளது.

  • 14 இன்ச் டிஸ்ப்ளே, பியுர்புக் ப்ரோ மாடலில் 15.6 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
  • போல்டு மற்றும் லைட் மாடல்களில் இண்டெல் பெண்டியம் சில்வர் N6000
  • பியுர்புக் ப்ரோ மாடலில் இண்டெல் கோர் i3 1220P பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
  • ஏஎம்டி நிறுவனத்தின் ரைசன் 5000 பிராசஸரை விட இண்டெல் கோர் i3 சக்திவாய்ந்த பிராசஸர் ஆகும்.
  • மூன்று லேப்டாப் மாடல்களிலும் FHD IPS ஸ்கிரீன், 60Hz ரிப்ரெஷ் ரேட், 1920×1080 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
  • பியுர்புக் போல்டு மாடலில் டச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
    நோக்கியா பியுர்புக் சீரிஸ் மாடல்களில் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி, வைபை 5 வழங்கப்பட்டு இருக்கிறது.
  • இத்துடன் யுஎஸ்பி 3.2 (x2), யுஎஸ்பி ஏ 3.2 (x1) போர்ட்கள், 3.2 எம்எம் ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டு உள்ளது.
  • இந்த மாடல்களில் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், கைரேகை சென்சார், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
  • இதன் போல்டு மற்றும் லைட் மாடல்களில் 128 ஜிபி எஸ்எஸ்டி, பியுர்புக் ப்ரோ மாடலில் 512 ஜிபி எஸ்எஸ்டி வழங்கப்பட்டு இருக்கிறது.
  • பியுர்புக் லைட் எடை 1.47 கிலோ ஆகும். பியுர்புக் போல்டு 2.5 கிலோவும், பியுர்புக் ப்ரோ எடை 2.0 கிலோ ஆகும். இதன் ப்ரோ மாடலில் 2MP கேமரா, அலுமினியம் டாப் பிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

#Laptop #Technology

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version