தொழில்நுட்பம்

45 நாட்கள் வரை தாங்கும் பேட்டரி பேக் அப்! அறிமுகமாகிய புதிய ஸ்மார்ட்வாட்ச்

Published

on

உலக சந்தையில் அமேஸ்பிட் நிறுவனம் அதன் ஜிடிஎஸ் 4 மினி ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது.

இது மிட்நைட் பிளாக், ஃபிளமிங்கோ பிங்க், மிண்ட் ப்ளூ மற்றும் மூன்லைட் ஒயிட் ஆகிய 4 நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் அல்ட்ரா ஸ்லிம் மற்றும் லைட் டிசைன் உடன் வந்துள்ளது. 15 நாட்கள் பேட்டரி பேக் அப் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் செப் இயங்குதளம் இடம்பெற்று உள்ளது.

அம்சங்களை பொருத்தவரை,

  •  1.65 இன்ச் ஹெச்.டி AMOLED டிஸ்ப்ளே
  • 270 எம்.ஏ.ஹெச் பேட்டரியும் இதில் இடம்பெற்று உள்ளது.
  • இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 15 நாட்கள் வரை நீடிக்குமாம்.
  • இதில் 120-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களும் இதில் இடம்பெற்று உள்ளன.
  •  இதில் உள்ள பேட்டரி சேவர் மோட் அம்சத்தை பயன்படுத்தினார் 45 நாட்கள் வரை சார்ஜ் நிற்கும்

இந்த ஸ்மார்ட்வாட்ச் வருகிற ஜூலை 16-ந் திகதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமேசான் மற்றும் அமேஸ்பிட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்தாகும்.

# smartWatch #technology

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version