தொழில்நுட்பம்

இனிமேல் வாட்ஸ் ஆப்பில் எல்லாத்தையுமே மறைக்கலாம்! புது அப்டேட் இதோ

Published

on

வாட்ஸ் ஆப் பயனாளர்கள் தங்கள் ப்ரைவஸியை மேலதிக கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவும் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த அம்சமானது, உங்களின் வாட்ஸ் ஆப் profile pictures, status அப்டேட் மற்றும் வேறு சில தகவல்களை (நீங்கள் தேர்வு செய்ய விரும்பும்) குறிப்பிட்ட சிலரிடம் இருந்து மறைக்க உதவும்.

இந்த அப்டேட் ஆனது, “இதை” அனைவரும் பார்க்கக்கூடாது என்று நீங்கள் விரும்பும் ஒரு “தகவலை” யார் எல்லாம் பார்க்க கூடாது என்கிற கட்டுப்பாட்டை விதிக்கும் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கும்.

முன்னதாக (அதாவது இந்த அம்சம் வருவதற்கு முன்னதாக) உங்கள் ப்ரொபைல் பிக்சர், லாஸ்ட் சீன் விவரங்கள் மற்றும் ஸ்டேட்டஸ் அப்டேட்டை, அனைவரும் பார்க்கலாம் (everyone), காண்டாட்ஸ்-இல் இருக்கும் அனைவரும் பார்க்கலாம் (all your contacts) அல்லது யாருமே பார்க்க கூடாது (nobody) என்கிற விருப்பங்கள் மட்டுமே அணுக கிடைத்தது.

ஆனால் இனிமேல் உங்கள் ப்ரொபைல் பிக்சர், லாஸ்ட் சீன் விவரங்கள் மற்றும் ஸ்டேட்டஸ் அப்டேட்-ஐ இவர்களை தவிர்த்து மற்றவர்கள் பார்க்கலாம் My contacts except என்கிற புதிய ஆப்ஷனும் அணுக கிடைக்கும்.

My contacts except என்கிற புதிய விருப்பத்துடன், வாட்ஸ்அப் இப்போது மொத்தம் நான்கு ப்ரைவஸி கண்ட்ரோல் செட்டிங்ஸ்-ஐ உங்களுக்கு வழங்குகிறது.

அதாவது:

1. Everyone உங்கள் லாஸ்ட் சீன், ப்ரொபைல் பிக்சர், அபௌட் அல்லது ஸ்டேட்டஸ் போன்ற விவரங்கள் அனைத்து வாட்ஸ்அப் யூசர்களுக்கும் பார்க்க முடியும்.

2. My Contacts உங்கள் லாஸ்ட் சீன், ப்ரொபைல் பிக்சர், அபௌட் அல்லது ஸ்டேட்டஸ் போன்ற விவரங்கள் உங்கள் வாட்ஸ்அப் காண்டாக்ட்ஸ்-இல் உள்ள அனைவரும் பார்க்கலாம்.

3. My Contacts Except நீங்கள் தேர்வு செய்த சில நபர்களை தவிர்த்து உங்கள் லாஸ்ட் சீன், ப்ரொபைல் பிக்சர், அபௌட் அல்லது ஸ்டேட்டஸ் போன்ற விவரங்கள் உங்கள் வாட்ஸ்அப் காண்டாக்ட்ஸ்-இல் உள்ள அனைவருக்கும் பார்க்க முடியும்.

4. Nobody உங்கள் லாஸ்ட் சீன், ப்ரொபைல் பிக்சர், அபௌட் அல்லது ஸ்டேட்டஸ் போன்ற விவரங்கள் யாருமே பார்க்க முடியாது.

#Technology

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version