தொழில்நுட்பம்

நிலவில் பனிக்கட்டி ஆராய்ச்சி! – தயாராகிறது நாசாவின் புதிய ரோவர்!

Published

on

நிலவில் பனிக்கட்டி ஆராய்ச்சி! – தயாராகிறது நாசாவின் புதிய ரோவர்!

இயந்திர ரோவரை நிலவுக்கு செலுத்தவிருக்கிறது நாசா.

நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் மற்றும் பனிக்கட்டிகள் இருக்கின்றனவா என ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவே இந்த ரோவரை நாசா அனுப்புகிறது.

எதிர்வரும் 2023ஆம் ஆண்டு இந்த ரோவர் நிலவில் தரையிறங்கவிருக்கிறது.ஆர்டெமிஸ் என்ற இத் திட்டம் மூலம் நாசா மீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப உள்ளது.

நீண்ட காலத்துக்கு மனிதர்கள் நிலவில் இருக்க இந்த ஆராய்ச்சி வழிவகுக்கும் என நம்பப்படுகின்றது.

நிலவில் பனி அடுக்கு படிமானங்கள் எங்கு இருக்கின்றன? அதில் என்னவெல்லாம் இருக்கின்றன? மற்றும் எத்தனை அடி ஆழத்தில் பனிக்கட்டிகள் இருக்கின்றன? போன்ற அடிப்படை கேள்விகளுக்கான விடையை விஞ்ஞானிகள் தெரிந்துகொள்ள இந்த வைபர் ரோவர் உதவும் என் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த ரோவர் நிரந்தரமாக நிழலிலேயே இருக்கும் பகுதிகளுக்குள்ளும் செல்லவேண்டி உள்ளதால் முகப்பு விளக்குகளோடு (ஹெட் லைட்) உருவாக்கப்படுகின்றது.இந்த நிலையில், முகப்பு விளக்குகளோடு உருவாக்கப்படும் நாசாவின் முதல் ரோவர் என்ற பெருமையை இது பெறுகின்றது.

ப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இந்த ரோவரின் முதல் பயணத்துக்கான இணைப்புப் பணிகள் அனைத்தும் தற்போது நடைபெற்று வருகின்றன.

இணைப்பு பணிகள் அனைத்தும் விரைவில் முடிவடைந்து. விரைவில் இந்த ரோவர் நிலவுக்கு பயணமாகவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நிலவுக்குச் செல்லும் போக்குவரத்து திட்டங்களை செய்து கொடுக்க வணிக நிறுவனங்கள், போட்டியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version