செய்திகள்

பால்வெளிக்கு வெளியே முதல் கோள் – கண்டுபிடித்தது நாசா

Published

on

அமெரிக்காவின் விண்வெளி நிலையமான நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி மூலம் பால்வெளிக்கு வெளியே முதல் கோள் கண்டுபிடிக்கப்பட்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் பல கோள்களும் சூரிய மண்டலத்தில் இல்லாத 5 ஆயிரம் புறகோள்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

பூமி சூரியனை சுற்றுவதை போல இப் புறகோள்கள் மற்ற நட்சத்திரங்களை சுற்றி வருகின்றன. இ வைகள் நாம் வாழும் பால்வெளி கெலக்சிக்கு உள்ளே தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன் நிலையில் பால்வெளிக்கு அப்பால் கோள் இருப்பதற்கான அறிகுறிகளை வானியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அது ஒருகோள் என கண்டுபிடிக்கப்பட்டால் இதுதான் பால்வெளிக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோளாக இருக்கும் என நாசாவின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி மூலம் இந்த கோள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

இக் கோள் பால்வெளியில் இருந்து 2.8 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

சனி கிரகத்தின் அளவை கொண்டுள்ள இந்த புதிய கோளுக்கு எம்51-1 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இக்கோள் குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இணை ஆசிரியர் நியா இமாரா கூறும்போது, ‘நாம் பால்வெளிக்கு வெளியே ஒரு கிரகத்தை பார்க்கிறோம் என்பது உறுதிப்படுத்த சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது இருக்கும்.

சுற்றுப்பாதைக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என்பது பற்றி நிச்சயமற்ற தன்மை நிலவுவதால் அக்கோளை எப்போது எம்மால் பார்க்க முடியும் என்பது எங்களுக்கு தெரியாது’ எனக் கூறியுள்ளார்.

#WORLD

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version