அரசியல்
மக்களின் செல்வாக்கு சரிந்துள்ளது: ஏற்றுக்கொண்ட நாமல்!
ராஜபக்சக்களுக்கு காணப்படும் மக்கள் செல்வாக்கில் சரிவு ஏற்பட்டுள்ளதனை தாம் ஒப்புக்கொள்வதாகவும் இது தற்காலிகமானது எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்
ஆங்கில பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது நாமல் ராஜபக்ச இதனை ஒப்புகொண்டார்.
இதுவரை காலம் ராஜபக்சக்களுக்கு காணப்பட்ட மக்கள் ஆதரவில் சரிவு ஏற்பட்டுள்ளது என்பதனை தான் ஒப்புக்கொள்வதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அரசியல்வாதிக்குமான மக்கள் செல்வாக்கு எல்லா காலங்களில் உச்சத்திலேயே இருப்பதில்லை என்பதனை புரிந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார். தலைவர்களின் மக்கள் செல்வாக்கு தளம்பும் நிலையுடையது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்சக்கள் எப்போதும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலில் ஈடுபட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
சேதன உரப் பயன்பாட்டுக்கு மாறிய தீர்மானமே மக்கள் ஆதரவில் தாக்கம் செலுத்தியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Srilankanews
You must be logged in to post a comment Login