கட்டுரை

“அழிவைத் தேர்ந்தெடுக்காதீர்கள்!” ஐ.நா. சபைக்குள் புகுந்த டைனோசர் உலகத் தலைவர்களுக்கு புத்திமதி

Published

on

“அழிவைத் தேர்ந்தெடுக்காதீர்கள்”(‘don’t choose extinction’) என்று ஐ. நா.சபையில் கூறுகிறது டைனோசர். அதன் குரலைத் தலைவர்கள் செவிமடுப்பார்களா?

ஏற்கனவே அழியுண்டுபோன உயிரினமாகிய டைனோசர் ஒன்று -ராஜதந்திர விதிமுறைகளை மீறி – உலகத் தலைவர்களுக்கு உரையாற்றுகின்ற வீடியோப் படம் ஒன்று வெளியாகி உள்ளது.

கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான மிகப் பெரிய உலக மாநாடு தொடங்கும் வேளையில் இந்த வீடியோ “கிளிப்” வெளியிடப்பட்டுள்ளது.

ஐ. நா. பொதுச் சபையிலும் உலகெங்கும் உள்ள ஐ. நா. அலுவலகங்களிலும் கடந்த ஓரிரு நாட்களாகக் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்ற இந்த வீடியோவை ஐ. நா.அபிவிருத்தித் திட்டம் அமைப்பு (UN Developm
ent Programme – UNDP) தயாரித்துள்ளது.

“Jurassic World” திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்களின் உதவியுடன் கணனி முப்பரிமாணக் காட்சிப் படங்களாக (CGI creature) உருவாக்கப்பட்ட அந்த டைனோசர் நியூயோர்கில் உள்ள ஐ. நா. பொதுச்சபை மண்டபத்துக்குள் பிரதிநிதிகளை ஆச்சரியப்படுத்தும் விதமாகத் திடுதிப்பென உள்ளே நுழைகிறது.

முதலில் பாதுகாவலர் ஒருவருடன் நகைச்சுவையாக உரையாடிவிட்டு சபையின் முன்பாக வந்து ஒலிவாங்கியைப் பிடித்து உரையாற்றத் தொடங்குகிறது. டைனோசரின் உரைக்கு உலகப் பிரபலங்கள் சிலர் பல மொழிகளில்
பின்னணிக் குரல் வழங்கி உள்ளனர்.

பிரபல நடிகரும் பாடகருமாகிய Jack Black ஆங்கில மொழியில் குரல் வழங்கியுள்ளார்.

எங்களிடம் ஒரேயொரு சிறு பூமிக்கோள் தான் இருக்கிறது.தவறுகளுக்கு இனியும் என்ன காரணத்தைச் சொல்லப்போகிறீர்கள்? காரணங்களையும் மன்னிப்புகளையும் சொல்வதை நிறுத்திவிட்டு மாற்றங்களைத் தொடங்க வேண்டிய தருணம் இது.

பணத்தின் மூலம் நீங்கள் செய்கின்ற எல்லாக் காரியங்களையும் ஒரு தடவை யோசித்துப் பாருங்கள்.உலகம் முழுவதும் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். முழு இனத்தையும் அழிப்பதற்குப் பணத்தைச் செலவிடுவதை விட அவர்களைக் காப்பாற்றுவது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

-இவ்வாறு தலைவர்களைப் பார்த்துக் கேள்வி கேட்கிறது “பிராங்கி”(Frankie) என்ற பெயர் கொண்ட அந்த டைனோசர்.

பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ. நா. உச்சி மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்கொட்லாந்தில் கிளாஸ்கோ நகரில் தொடங்கியுள்ளது. புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்த தத்தமது பங்குக்கு எடுக்கவுள்ள காபன் குறைப்புத் திட்ட முன்மொழிவுகளுடன் சுமார் 200 நாடுகளது தலைவர்களும் பிரதிநிதிகளும் கிளாஸ்கோ நகரில் கூடியுள்ளனர்.

(படங்கள் :don’t choose extinction’ Twitter page)
குமாரதாஸன். 31-10-2021
பரிஸ்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version