ஆன்மீகம்

திருமண தடையை ஏற்படுத்தும் சுக்கிர தோஷமும் – அதற்கான பரிகாரமும்

Published

on

ஒருவரின் வாழ்வில் சகல சௌபாக்கியங்களை பெற்று வாழ வேண்டுமெனில் அவரின் ஜாதகத்தில் சுக்ரனின் அனுக்கிரகம் இருக்க வேண்டும். சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே அவரின் திருமண வாழ்க்கை, சுக போகங்கள், மகிழ்ச்சி ஆகியவை கிட்டும். எனவே தான் ஒருவரின் ஜாதகத்தில் சுக்ரனின் நிலை மிக முக்கியமாகும்.

இப்பொழுது சுக்கிர தோஷம் ஏற்பட்டால் அதற்கு என்ன பரிகாரங்கள் மேற்கொள்ளலாம் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

ஒருவரின் சாதகத்தில் கன்னி வீட்டில் சுக்கிரன் மட்டும் தனித்து இருந்தாலோ, கன்னி வீட்டில் சுக்கிரன் நீச்சம் அடைந்து செவ்வாயுடன் இணைந்து இருந்தாலோ, லக்கனத்திற்கு 8-ம் வீட்டில் சுக்கிரன் இருந்தாலோ, அல்லது சுக்கிரனக்குரிய இடமாக இல்லாமல் இருந்து அது 7-ம் வீட்டில் இருந்தாலோ, அல்லது லக்கனத்திற்கு 3-ம் வீட்டில் மறைந்து இருந்தாலோ, 12-ம் இடத்தில் மறைந்திருந்தாலோ அது சுக்கிர தோஷம் ஆகும்.

இந்தத் தோஷம் திருமணத்தடை மற்றும் திருமணத்திற்கு தாமதம் ஏற்பட காரணமாக இருக்கிறது. அதாவது சாதகத்தில் சுக்கிர பகவான் ஏதாவது ஒரு கெடுதல் செய்யும் கோளுடன் இணைந்து இருத்தலே, இந்தத் தோஷத்திற்குக் காரணமாக உள்ளது.

சரியான தசா புத்தி வரும்வரை காத்திருப்பது நல்ல பரிகாரம் ஆகும். இல்லையென்றால் தேவையற்றப் பிரச்சனைகளை வாழ்வில் சந்திக்க நேரிடும். பிற தோஷங்களை ஒப்பிடுகையில் சுக்கிர தோஷம் கெடுதல்களை அளிப்பதில்லை.

எனினும், திருமண உறவில் விரிசல் அல்லது பிரிவுக்கு சில நேரங்களில் அது ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு பரிகாரம் தனித்து இருக்கும் சுக்கிர பகவானை வழிபடுவதன் மூலம், சுக்கிர தோஷத்தின் கெடுதல்களைக் குறைக்க இயலும்.

களத்திரகாரகரான சுக்ரன் 7-ல் அமர்வது காரகோ பாவக நாஸ்த்தி. சிலருக்கு திருமணத்தை தாமதப்படுத்துகிறது. இந்த தோஷம் பெண்களை விட ஆண்களை மிகவும் பாதிக்கிறது.

பரிகாரம்

சுக்கிர பகவானுக்கு வெண்ணிற ஆடைகள் சாற்றி, தாமரை பூவால் அர்ச்சனை செய்து வர வேண்டும். மொச்சைப் பயிரை பிரசாதமாக செய்து கோவிலுக்கு வருபவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் வீட்டில் அத்தி மரங்கள் வளர்த்து வரலாம்.

இரவில் மொச்சை பயிரை ஊற வைத்து அந்த தண்ணீரை இந்த மரத்திற்கு ஊற்றி அந்த மொச்சை பயிரை பசுவிற்கு கொடுத்து வர வேண்டும். மேலும் வீட்டில் மஹாலக்ஷ்மி உருவ படத்தை வைத்து வெள்ளிக் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

இவ்வாறு செய்து வந்தால் சுக்கிர தோஷம் குணமடையும். வெள்ளிக்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

#LifeStyle

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version