ஆன்மீகம்

மகாவிஷ்ணுவை புரட்டாசியில் வழிபடுவது ஏன்?

Published

on

நவகிரகங்களில் புதன் கிரகத்திற்குரிய மாதமாக இருப்பது புரட்டாசி .

புதன் கிரகத்தின் அதிதேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு .எனவே தான் புதன் கிரகத்தின் அருளை பெற விஷ்ணுவின் வழிபாடு புரட்டாசியில் உகந்ததாக இருக்கிறது.

மகாவிஷ்ணு எனப்படும் பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுக்குரிய வீடு கன்னி ராசி. இந்த ராசியில் சூரியன் அமர்வதும் புரட்டாசி மாதத்தில் தான் .

எனவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு பஜனைகள் செய்து வழிபடுவது ,ஆலயங்களில் பிரம்மோற்சவங்கள் நடத்துவது போன்றவை செய்யப்படுகின்றன.

புதன் கிரகத்திற்கு நட்பானவன் சனி பகவான் அதனால் தான் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாள் வழிபாட்டிற்கு கூடுதல் சிறப்புக்குரியதாக இருக்கிறது.

புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப்பற்களில் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும் துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவை வழங்குவது சிறப்பு என்று கருதப்படுகின்றது.

#spiritual

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version