ஆன்மீகம்

தீபாவளிக்கு மறுநாள் அபூர்வ சூரிய கிரகணம்! இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்

Published

on

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 24-ந்திகதி கொண்டாடப்பட உள்ளது.

அதற்கு அடுத்த நாள், அதாவது ஐப்பசி மாதம் 8-ம் நாள் 25.10.2022 (செவ்வாய்க்கிழமை) மாலை 5.10 மணி முதல் 5.45 வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

கவனமாக இருக்க வேண்டியவர்கள் யார்?

கிரகண காலத்தில் திருவாதிரை, சித்திரை, சுவாதி, விசாகம், சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்களும், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம் ராசிக்காரர்களும், சாந்தி செய்வது உத்தமம்.

மற்ற ராசிக்காரர்கள் நவகிரகத்தில் உள்ள சூரிய பகவானுக்கு கோதுமை, சிகப்பு ஆடை, சர்க்கரைப் பொங்கல், அரளிப்பூ சகிதம் அர்ச்சனை செய்யலாம்.

பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?

சாந்தி செய்யக்கூடியவர்கள் மட்டைத்தேங்காய், அரிசி, வெற்றிலைப்பாக்கு, பூக்கள், மேலுள்ளவைகளை சேர்த்து சகிதம் அர்ச்சனை செய்து கொள்ளலாம்.

பொதுமக்கள் அருகில் உள்ள கோவில்களில் தர்ப்பை பெற்று வீட்டின் வாசற்கால் மற்றும் மளிகை, காய்கறி, பொருட்கள், தயிர், பாலில் போடலாம். மதியம் உணவு அருந்தக்கூடாது.

குறிப்பு

மாலை 4.30 மணி முதல் 6.15 மணி வரை அனைத்து மக்களும் நீராகாரம் உள்பட எதுவும் அருந்தக்கூடாது. கர்ப்பிணிகள் வீட்டிலேயே அமைதியான சூழலில் படுத்து இருக்க வேண்டும்.

#spiritual

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version