European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

Share

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சந்தை சட்டத்தை கூகுள் மீறியதாகவும் போட்டி நிறுவனங்களை முடக்கியதாகவும் கூறி, 1 பில்லியன் டொலர் அபராதம் விதித்துள்ளது.

குறித்த, நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனம் தனது தேடல் பக்கங்களில் பிற நிறுவனங்களின் சேவைகளை விடத் தனது ஷொப்பிங், சுற்றுலா மற்றும் பிற சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், பிளே ஸ்டோர் மூலம் பிற செயலி உருவாக்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்குச் சலுகைகளை நேரடியாக வழங்குவதைத் தடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு, உடனடியாகப் பதிலடி கொடுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களை இலக்கு வைத்துச் செயல்படுவதாகவும், அமெரிக்கா ஐரோப்பாவிற்கான பணப்பெட்டி அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சட்டவிரோதமான இந்த நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டி வரும் என்றும், விரைவில் ஐரோப்பிய பொருட்கள் மீது கணிசமான வரி விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் வணிக நடைமுறைகள் குறித்து விசாரிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்திற்கு உத்தரவிடப் போவதாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள, கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் கென் வாக்கர், இந்தத் தீர்ப்பு நுகர்வோருக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தைக் குறைக்கும் வகையில் உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
gunshootpolise 1
உலகம்

மிச்சிகன் மாநிலத்தில் துப்பாக்கி சூடு – துப்பாக்கிதாரி உள்ளிட்ட பலர் பலி!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச்சூட்டை...

தாய்வானில்
உலகம்

தாய்வானில் முடக்கப்பட்ட இணைய சேவை – சீனாவின் அச்சுறுத்தலின் விளைவாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள்!

தாய்வானில் முன்னெடுக்கப்பட்டு வரும் வருடாந்த ‘ஹான் குவாங்’ இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாகத் தலைநகர் தாய்பேயில்...

ஜப்பானில் கொலை
உலகம்

ஜப்பானில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்!

ஜப்பானில் கல்வி பயின்று வந்த, 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் சிபா (Chiba) மாநிலத்தில்...

hourthis red sea Houthi Rebels Attack Cargo Ship In Gulf Of Aden
உலகம்

சர்வதேச கடற்பரப்பில் தாக்கப்பட்ட சரக்கு கப்பல் – உயிரிழந்துள்ள பணியாளர்கள்!

செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தெப் நீரிணைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றின் மீது...