விளையாட்டு
இணையத்தி்ல் பலரது கவனத்த ஈர்த்துள்ள தலடோனியின் வீடியோ! என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா?
'My father thought I won't pass the school board exam' - @MSDhoni 😁pic.twitter.com/fvclSbnvGH
— DHONI Era™ 🤩 (@TheDhoniEra) October 10, 2022
கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த தோனி பள்ளி நிகழ்ச்சிக்கு ஒன்றிற்கு சென்றிருந்த போது தனது பள்ளி பருவத்தில் தன் தந்தை கூறியதை நினைவு கூர்ந்துள்ளார்.
பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனி மாணவர்களிடம் தனது பள்ளி பருவம் குறித்து பகிர்ந்து கொண்ட வீடியோ வெளியாகி உள்ள. அதில், நான் படிப்பில் சராசரி மாணவன் தான். 7-ம் வகுப்பு முதல் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்ததால் எனது வருகைபதிவு குறைவானது. மற்றப்படி நான் நல்ல மாணவன். பத்தாம் வகுப்பில் 66 சதவீதமும் 12-ம் வகுப்பில் 57 சதவீத மதிப்பெண்கள் பெற்றேன்
.நான் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு மிகவும் சந்தோஷமடைந்தேன். ஏனென்றால் என் அப்பா என்னை பத்தாம் வகுப்பு கூட பாஸ் செய்ய மாட்ட என்று சொல்லி வந்தார்.
அதனால் நான் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த உடன் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன் என்றார்.
இந்த வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்தாகும்.