செய்திகள்
திருமண நிகழ்வொன்றில் பங்கேற்றவர்களுக்கு நேர்ந்த கதி!
திருமண நிகழ்வொன்றில் பங்கேற்ற 35 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குருநாகல், குளியாப்பிட்டிய எம்பவ பிரதேசத்தில், நேற்று இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் பங்கேற்ற 35 பேருக்கு பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, குளியாப்பிட்டிய பொதுசுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
குளியாப்பிட்டிய கரகஹகெதர பிரதேசத்திலுள்ள மண்டபமொன்றில் இந்த திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதன்போதே 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று முற்றாக நீங்கிவிட்டது என்று நினைத்து மக்கள் செயற்படுவதால் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, குளியாப்பிட்டிய பொதுசுகாதார வைத்திய அதிகாரி உத்பல சங்கப்ப தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
You must be logged in to post a comment Login