Connect with us

காணொலிகள்

டிஜிட்டல் உலகின் முடிசூடா மன்னன் ஸ்டீவ் ஜொப்ஸ் – Steve Jobs Story

Published

on

டிஜிட்டல் உலகின் முடிசூடா மன்னன் ஸ்டீவ் ஜொப்ஸ் – Steve Jobs Story

உலகின் முதல் அப்பிள் தொடர்பாக உலகின் முதல் மனிதர்களுக்கு ஒருகட்டளை விதிக்கப்பட்டது. ‘இந்த தோட்டத்தின் அனைத்து கனிகளையும் நீங்கள் உண்ணலாம் ஆனால் அதோ அந்த விலக்கப்பட்ட மரத்தின் கனிகளை தவிர’ என்பது அந்த கட்டளை.

உலகின் இரண்டாவது ஆப்பிள்  மனிதர்களுக்கு மிக நீண்ட ஒருஅறிவியல் பாடம் சொன்னது. புவி ஈர்ப்பு விசை தொடர்பாக அறிவியல் மேதை நியூட்டனால் சொல்லப்பட்ட அறிவியல் பாடமே அது.

உலகின் மூன்றாவது ஆப்பிள், நவீன விரும்பிகளாக மாறிக்கொண்டிருந்த, நவீனத்தின் பிடியில் சிக்குண்ட ஏன் நவீனத்தை எதிர்த்துக்கொண்டிருந்த உலகின் அத்தனை தரப்புக்களையும் ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு போனது.

டெக் உலகின் மன்னர் என வர்ணிக்கப்படுகின்ற, இளைய தலைமுறையின்னாடித்துடிப்பை அறிந்த, தன் அடுத்தடுத்த கண்டுபிடிப்புக்களால் உலகையே வசீகரித்த  ஸ்டீவ் ஜொப்ஸினால் உருவாக்கப்பட்ட ஆப்பிளே அந்த மூன்றாவது ஆப்பிள்.

தலைமுறைகளின் விருப்பங்களை அறிந்த ஒருவனால் தான் இந்த உலகின் தலைசிறந்த வியாபாரி என பெயர் வாங்க முடியும். அந்த சூத்திரங்களை புரிந்து கொண்டவர்கள் தான் இன்றைய வியாபார உலகில் கொடி கட்டி கோலோச்சிக்கொண்டிருக்கிறார்கள்.

உலகின் தலை சிறந்த வியாபாரிகளில் ஒருவர், நவீன கண்டுபிடிப்புக்களின் போக்கை மாற்றுவதில் மிகப்பெரிய பங்கு வகித்தவர், உள்ளங்கைக்குள் உலகை அடக்கிய கைத்தொலைபேசியை அடுத்த தளத்துக்கு கொண்டு சேர்த்தவர் ஸ்டீவ் ஜொப்ஸின் வாழ்க்கை பதிவுகளை இந்தவார முகவரி தந்த மனிதர்கள் மனிதர்கள் மூலம் பார்க்கலாம்.

முகவரி தந்த பெரும்பாலான மானிடர்களை போலவே ஸ்டீவ் ஜொப்சின் வாழ்க்கையும் மிகவும் சுவாரஸ்யம் மிக்கதாக காணப்படுவதுடன், ஒரு கற்பிதம் சொல்லக்கூடிய அளவுக்கான சவால்களையும் பாடங்களையும் கொண்டது. பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த திருமணமாகாத இரண்டு காதல் பறவைகளுக்கு மகனாக, பின்னாட்களில் உலகையே வியக்க வைப்பேன் எனும் எந்தவிதமான சிந்தனை, முன்னறிவித்தல்கள் இன்றி பெப்ரவரி 24, 1955ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் திகதி பிறந்தார் ஸ்டீவ் ஜொப்ஸ். முறைப்படி திருமணம் செய்துகொள்ளாத ஜோடி தனது தாய் தந்தையராக இருந்ததால், ஸ்டீவ் ஜொப்சின் ஆரம்ப காலம் மிகவும் சவால் மிக்கதாக இருந்தது.

தனது இரத்த சொந்தமான தாய் தந்தையருடன்  இணைந்து வாழ்வதற்கு ஸ்டீவ் ஜொப்ஸுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. மாறாக, கலிபோரினியாவில் இருந்த இரண்டு தொழிலாளர் குடும்ப இணையர்களான பால் ஜொப்ஸ், கிளாரா ஜொப்ஸ் ஆகியோரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டார் ஸ்டீவ் ஜொப்ஸ்.

இவ்வாறு ஸ்டீவ் ஜொப்ஸ் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட காலப்பகுதியில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கினார்.

பள்ளிக்கால படிப்பின் போதே அவர் வறுமையினை தாக்கத்தினை உணர்ந்திருந்தாலும், ஸ்டீவ் ஜொப்ஸ் தனது பள்ளிக்கல்வியை சிறப்பாக முடித்திருந்தார். தனது பள்ளிக்கல்வியினை தொடர்ந்து கல்லூரிப்படிப்பிற்காக தன்னை இணைத்துக்கொண்ட ஸ்டீவ் ஜொப்ஸ், இடை நடுவே அதனை கைவிட்டார்.

தனது கல்லூரி படிப்பை இடை நடுவே ஸ்டீவ் ஜொப்ஸ் கை விடடமைக்கு வறுமையும் ஒரு முக்கிய பங்கு வகித்திருந்தாலும், தனக்கான இலக்கினை அடைய தனது கல்லூரி படிப்பு உதவ போவதில்லை என்பதை ஸ்டீவ் ஜொப்ஸ் கல்லூரியில் சேர்ந்து ஆறு மாத காலப்பகுதியிலேயே உணர்ந்திருந்தமை ஒரு மிக முக்கியமான காரணியாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் பின்னாட்களில் தனது இளமைக்காலம் பற்றி கருத்து தெரிவிக்கையில் எனது இளவயதில் வறுமை காரணமாக நான் எனது படிப்பினை இடை நடுவில் நிறுத்திவிடலாமா என எண்ணியுள்ளேன் என கருத்து தெரிவித்துள்ளார் ஸ்டீவ் ஜொப்ஸ்.

இவ்வாறு ஸ்டீவ் ஜொப்ஸ் தத்து பிள்ளையாக வளர்க்கப்பட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியில், ஸ்டீவ் ஜொப்ஸின் நிஜமான தாய் தந்தையர் திருமணம் செய்து ஓர் பெண் குழந்தையினை பெர்றேடுக்கின்றனர். குறித்த பெண்குழந்தை தனது இள வயதினை எட்டிய பின்னரே, தனது சகோதரன் பற்றி அறிந்து கொள்ளும் அளவுக்கு அவர் தனிமையில் தனது இளமைக்காலத்தை கழிக்க நேர்ந்தது.

இளமை ஸ்டீவ் ஜொப்ஸின் மன தைரியத்தை சிதைத்து விடவில்லை என்றாலும், ஓர் மனிதன் வாழ்வதற்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான, தேடல்களின் பொருட்டு ஸ்டீவ் ஜொப்ஸை அலைக்கழித்தது.

சிறு வயதில் இருந்தே ஸ்டீவ் ஜொப்ஸ் தனிமை விரும்பியாக இருந்தார். பெரும்பாலும் அவர், தான் வசித்த நகரின் ஆலயங்களில் அமர்ந்திருப்பதையும், அங்கு உறங்குவதையும் விரும்பினார். வாரத்தில் ஒரு முறை அவ்வாலயங்களில் வழங்கப்படும், உணவினை வாங்கி உண்ணுவது ஸ்டீவ் ஜொப்ஸ் வாழ்ந்த வறுமையான சூழ்நிலைக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

மின்னணு பொருட்கள் மேல் ஸ்டீவ் ஜொப்ஸ்க்கு சிறு வயது முதலே தீராத காதல். தனக்கு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் தனக்கு கிடைக்கும் மின் சார்ந்த பொருட்களுடன் விளையாடி வந்த ஸ்டீவ் ஜொப்ஸ்தான் தனது பிற்காலத்தில், அறிவியல் உலகின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவராவார்.

இவ்வாறு தனிமையுடனும், கைகளில்கிடைக்கும் மின் சார் பொருட்களுடனும் தனது காலத்தை கழித்த ஸ்டீவ் ஜொப்ஸின் வாழ்க்கையினை வெறுமை அண்டாது பார்த்துக்கொண்டவர்களில், அவரது பள்ளிக்கால ஆசிரியர் ஒருவருக்கு மிக முக்கிய பங்குண்டு புதிய விடையங்களை தமது மாணவர்களுக்கு செயற்றிட்டமாக வழங்கும் அவர் அதனை தனது மாணவர்களில் யாரேனும் திறமையாக செய்து முடித்தால், அவர்களுக்கு சன்மானமாக சில பரிசு பொருட்களை வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த சிறிய சவாலின் மேல் ஸ்டீவ் ஜொப்ஸ்க்கு இருந்த ஆர்வம் அவரை ஒவ்வொரு விடயத்திலும் முழு முனைப்போடு பங்கெடுக்க வைத்தது.

அந்த ஆசிரியர் மட்டும் இல்லையென்றால், தான் ஒரு ரெளடி ஆகியிருப்பேன் என தனது பின்னாட்களில் அந்த ஆசிரியரை நினைவு கூர்ந்திருந்தார் ஸ்டீவ் ஜொப்ஸ்.

ஸ்டீவ் ஜொப்ஸ், தனது கல்விக்காலத்தில் எச்.பி நிறுவனத்தில், உரைகளை கேட்பதை பொழுதுபோக்காக கொண்டிருந்தார். அவ்வாறு எச் பி நிறுவனத்தில், உரைககளை கேட்டுக்கொண்டிருந்த காலத்தில்,அவருக்கு அறிமுகமான மற்றொரு நண்பர் ஸ்டீவ் வோஸ்னியாக். இருவருக்குமே அறிவியல், மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களில் மிகுந்த ஆர்வம் இருந்ததன் காரணமாக குறுகிய காலத்திலேயே இருவரும் நெருக்கமான நண்பர்களாக மாறிப்போயினர்.

உலகை ஆக்கிரமித்துக்கொக்ண்டிருக்கும், ஆப்பிள் கண்டுபிடிப்புக்களின் செல்வாக்குக்காக சொல்லப்படும் எத்தனையோ காரணங்களில் இவ்விருவரது நட்பும் மிக முக்கியமானது.

தனது கல்லூரி படிப்பு தனது துறைக்கு கைகொடுக்கப்போவதில்லை என்று ஸ்டீவ் ஜொப்ஸ் எடுத்த முடிவுக்கு பின்னர், ஒரு வீடியோ கேம் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து அதன் பின்னர் அந்த வேலையும் தனாக்கனது அல்ல என முடிவெடுத்த பின்னர் ஸ்டீவ் வோஸ்னியாக் நடத்தி வந்த கணனி கிளப்புடன் தன்னை இணைத்துக் கொள்கிறார்.

இவ்வாறு தான் எடுக்கின்ற முடிவுகளில் எல்லாம் தனக்கு துணையாக இருக்க ஓர் நண்பனை தேடிக்கொண்டது ஸ்டீவ் ஜொப்ஸ்க்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

உலகின் மிகப்பெரிய வியாபார நிபுணர்கள் எல்லோருமே எதோ ஒரு வகையில் தமது தோற்றத்தை தனித்துவமாக கொண்டவர்களாக இருக்கின்றனர்.  உலக பணக்காரர் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் பில் கேட்ஸ்,  முகப்புத்தகத்தின் உருவாக்குனர் மார்க் ஷூகெர்பேர்க் உள்ளிட்டவர்கள் தமக்கான ஓர் தனித்துவம் கொண்ட ஆடைகளையே அணிந்து வந்தனர்.

அவர்களை போலவே, ஸ்டீவ் ஜொப்ஸ் அணியும் ஆடைகளும் தனித்துவமாக பார்க்கப்பட்டதுடன், பலராலும் விரும்பப்பட்டது. நீள, கழுத்தினை மூடிய நீள கை டீ.சேட் மற்றும் லெவிஸ் மார்க் நீள கால்ச்சட்டை அணிவது அவரது வழக்கமாக இருந்தது.

தனது நாளாந்த தேவைகளுக்காக ஸ்டீவ் ஜொப்ஸ் ஏறக்குறைய நூறு நீள காற்சட்டைகளை பாவித்திருக்கிறார் என்பது அவரது இறப்புக்கு பின்னர் தெரிய வந்திருக்கிறது.

ஸ்டீவ் ஜொப்ஸ் பெஸ்கடேரியன் pescatarian எனப்படும் மீன் உணவுப்பழக்கத்தை கொண்டவர். அதாவது காய்கறிகள் மற்றும் மீன் ஆகியவற்றை தமது உணவுடன் சேர்த்துக்கொள்ளக்கூடியவராக காணப்பட்டார்.

ஸ்டீவ் ஜொப்ஸ் தனது வாழ்க்கையினை இலகுவாக அமைத்துக்கொண்டமையின் காரணமாகவேவ் அவரால் சாதிக்க முடிந்ததாக சொல்லப்படுகிறது. தனது நாளாந்த வாழ்க்கையினை மிகவும் கடினப்படுத்திக்கொள்ளாமல், இலகுவாக வாழ்ந்த ஸ்டீவ் ஜொப்ஸ், அறிவியலில் கூட புத்தம் புதிதாக ஏதாவது கண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துக்கு பதிலாக, ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட கணணியை அனைவரது இலகு பாவனைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும்  என நினைத்தார். அதன் மூலம் மக்களின் மனங்களில் இடம்பிக்க முடியும் என நினைத்ததுடன், வியாபார ரீதியாகவும் லாபமீட்ட முடியும் என்பது ஸ்டீவ் ஜொப்ஸ் மனதில் போட்ட கணக்கு. உண்மையில் அதற்கான தேவை அக்கால கணனி உலகத்திற்கு இருக்கத்தான் செய்தது. ஏனெனில் தற்போது நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிலான கணனிகளே அக்காலத்தில் பாவனையில் இருந்தன.

அதனை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் ஸ்டீவ் ஜொப்ஸின் முயற்சிகள் யாவும். அதில் ஸ்டீவ் ஜொப்ஸ் கண்ட வெற்றிதான் இன்று நாம் அனைவரும் கண்களை அகல திறந்து பார்த்து வியக்கும், ஆப்பிள் நிறுவனத்தின் அத்தனை படைப்புக்களும்.

ஸ்டீவ் ஜொப்ஸ் தனது வாழ்க்கையினை எடுத்த மாத்திரத்திலேயே ஆரம்பித்து விடவில்லை. தனது வாழ்க்கை தொடர்பான தேடல் ஸ்டீவ் ஜொப்ஸிடம் நிறையவே இருந்தது. அவ்வாறான ஒரு தேடலின் விளைவாக 1974ம் ஆண்டு தனது கல்லூரி நண்பன் ஒருவனுடன் சேர்ந்து இந்தியா வருகின்றார் ஸ்டீவ் ஜொப்ஸ்.

இந்தியாவின் பெரு நகரங்களில் சுற்றித்திரிந்த ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் அவரது கல்லூரி நண்பர், ஓர் ஆசிரமத்துக்கு செல்ல முடிவெடுக்கின்றனர். இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் கைஞ்சி எனும் ஆசிரமத்துக்கு செல்ல முடிவெடுத்த இருவரும் அங்கிருக்கக்கூடிய மகராஜ் ஜி எனும் மத குருவை சந்திக்க முடிவெடுக்கின்றனர். ஆனால் காலம் ஸ்டீவ் ஜொப்ஸின் எண்ணங்களை காட்டிலும் வேகமாக சுழன்றது. ஸ்டீவ் ஜொப்ஸ் திட்டமிட்டபடி மஹராஜ் ஜீயை சந்திக்கும் முன்னமே அவர் மரணத்தை தழுவிக்கொள்ள, ஸ்டீவ் ஜொப்ஸ் அவரது சிந்தனைகளை பின்பற்றத் தொடங்குகிறார்.

பின்னர் அவர் பெளத்த சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு தனது மதமாக பெளத்தைத்தை ஏற்றுக்கொள்கிறார்.

பின்னர் மீண்டும், அமெரிக்கா சென்ற ஸ்டீவ் ஜொப்ஸ் கொஞ்சம் அதிகமாகவே சிரமங்களை எதிர்கொண்டார். பின்னர் தனது நண்பனான ஸ்டீவ்  வோஸ்னியாக்குடன் கரம் கோர்க்கிறார். இருவருமே இலத்திரனியல் துறை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் என்பது இருவரது நட்புக்கும் எதிர்காலத்துக்கும் பலமாக அமைந்து போக, அதனை தனக்கு அல்லது தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார் ஸ்டீவ் ஜொப்ஸ்.

ஏப்ரல் 01 உலகளவில் முட்டாள்கள் தினமாக மட்டுமே பரப்பப்பட்டு வருகின்ற நிலையில், அன்றைய தினத்தில் தான் ஓர் அறிவியல் புரட்சிக்கான விதை பொடியாப்பட்டிருக்கின்றது என்பது நம்மில் பலர் அறிந்திருக்கவில்லை.

ஆம் 1976ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதிதான் இன்று உலகின் இளையோர்களையெல்லாம் வசீகரித்துக்கொண்டிருக்கும், உலக அறிவியல் வல்லுநர்களை எல்லாம் ஆச்சர்யப்படுத்திக்கொண்டிருக்கும், ஆப்பிள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புக்கள் மேல் ஈர்ப்பு கொண்ட அனைவருக்குள்ளும் எழும் கேள்விகளில் ஒன்று, எதற்காக ஆப்பிள் என்ற பெயரை தனது தயாரிப்புக்களுக்கு ஸ்டீவ் ஜொப்ஸ் சூட்டினார் என்பதாகும்.

ஸ்டீவ் ஜொப்ஸ் தனது கல்விக்காலங்களில் தோட்டங்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த வகையில் ஒரு நாள் தன ஆப்பிள் தொடடத்திற்கு சென்று வந்து அது தொடர்பாக சிந்தித்துக்கொண்டிருந்த போது, அப்பிள் என்ற பெயர் வேடிக்கையான, உற்சாகமான, அதே நேரம், சாதுவான ஓர் பெயராக இருந்ததாகவும் அதன் காரணமாகவே அப்பெயரை தனது தயாரிப்புக்களை சூட்டியதாகவும் ஸ்டீவ் ஜொப்ஸ் ஒரு முறை தெரிவித்துள்ளார்.

அப்படி ஆரம்பிக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின், முதல் தயாரிப்பான ‘அப்பிள் I’ ஓரளவு கவனத்தை ஈர்த்தது, எனினும் அந்த நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் அவர்களது பங்காளிகள் அதனால் திருப்தி கொள்ளவில்லை.

தமது தாயாரிப்புக்கள் உலகில் உள்ள கணனிகளை, கைத்தொலைபேசிகளையும் விட தனித்துவம் மிக்கதாக இருக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை உடையவர்களாக இருந்தனர். அதன் வெளிப்பாடு தான் இன்று உலகம் முழுதும் வியாபித்திருக்கும் அப்பிள் தயாரிப்புகள்.

நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றிகரமான பாதையில் அதனை வழிநடத்துவதற்கு பல சவால்களை ஸ்டீவ் ஜொப்ஸ் எதிர்கொண்டிருந்தார் ஆயினும், அவ்வப்போது அவர் எதிர்பாராத நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்தன.

அதில் ஒன்று அவர் தனது சொந்த நிறுவனத்தில் இருந்தே வெளியேற்றப்பட்டமை.

ஆம், 1985 ஐ அண்டிய காலப்பகுதி ஸ்டீவ் ஜொப்ஸின் போதாகாலமாக பார்க்கப்படுகிறது. அந்த காலப்பகுதியில் இன்று உலகின் பெயர் சொல்லக்கூடிய மற்றொரு இலத்திரனியல் நிறுவனமாக வளர்ந்து நிற்கும், மைக்ரோசொப்ட் நிறுவனத்தால் பல நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டது அப்பிள் நிறுவனம். அத்துடன் அப்பிளின் தயாரிப்புக்களை விரும்புவதற்கும் கொண்டாடுவதற்கு பலர் இருந்த போதும், விலை உயர்ந்த அதன் தயாரிப்புக்களை வாடிக்கையாளர் வாங்கிக்கொள்ளும் சதவீதம் மிக குறைவாகவே காணப்பட்டது.

இவை எல்லாவற்றின் விளைவுகள், ஸ்டீவ் ஜொப்ஸின் வாழ்க்கையில் பாரிய பதிப்புக்களை ஏற்படுத்த தனது சொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் ஸ்டீவ் ஜொப்ஸ். பலத்த பாதிப்பை குறித்த வெளியேற்றம் ஸ்டீவ் ஜொப்ஸுக்கு ஏற்படுத்திருந்தாலும், அவர் தனக்கான ஒரு சிறிய குழுவை இணைத்துக்கொண்டு ‘நெக்ஸ்ட்’ எனும் வியாபார வல்லுநர்கள் மற்றும் உயர் கல்வி மாணவர்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் செயற்படும் கணினி மேம்பாட்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கிறார்.

1997ம் ஆண்டு ஸ்டீவ் ஜொப்ஸின் நெக்ஸ்ட் நிறுவனம் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைக்கப்பட மீண்டும் தனது நிறுவனத்துக்கு தலைமை அதிகாரியாகிறார் ஸ்டீவ் ஜொப்ஸ்.

அதன் பிறகு ஸ்டீவ் ஜொப்ஸ் தனது காலத்தில் அறிமுகப்படுத்திய அத்தனை ஆப்பிள் தயாரிப்புக்களிலுமே மிக நுணுக்கமான மற்றும் மக்கள் விரும்பக்கூடிய மாற்றங்கள் பலவற்றை புகுத்தினார்.

2011ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ம் திகதி இந்த உலகத்துக்கு தனது தாயாரிப்புக்களையும், அதன் மீதான ஆச்சரியங்களையும் பரிசளித்துவிட்டுப்போன ஸ்டீவ் ஜொப்ஸ் இப்போதும் கூட டெக் உலகின் முடிசூடா மன்னனாக பார்க்கப்படுகிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

#SteveJobs

 

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 7 Rasi Palan new cmp 7
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசி பலன் 15.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 15.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 15, 2024, சோபகிருது வருடம் சித்திரை...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 14.04.2024 – இன்று தமிழ் வருட பிறப்பு

​இன்றைய ராசி பலன் 14.04.2024 – இன்று தமிழ் வருட பிறப்பு இன்றைய ராசிபலன் ஏப்ரல் 14, 2024, சோபகிருது வருடம் சித்திரை 1, ஞாயிற்று கிழமை,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 13.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 13.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 13, 2024, சோபகிருது வருடம் பங்குனி...

Rasi Palan new cmp 6 Rasi Palan new cmp 6
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 12.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 12.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp 5 Rasi Palan new cmp 5
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 11.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 11.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

24 661635261b7af 24 661635261b7af
உலகம்6 நாட்கள் ago

ஓட்டு கேட்க சென்ற இடத்தில் பெண்ணிற்கு முத்தம் கொடுத்த பாஜக வேட்பாளர்

ஓட்டு கேட்க சென்ற இடத்தில் பெண்ணிற்கு முத்தம் கொடுத்த பாஜக வேட்பாளர் மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் பெண் ஒருவருக்கு பாஜக வேட்பாளர் முத்தம் கொடுத்த...

Rasi Palan new cmp 4 Rasi Palan new cmp 4
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 10.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 10.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...