உலகம்

கனடாவில் நண்பர்களுக்கு கொட்டிய அதிஷ்டம்

Published

on

கனடாவில்(canada) நண்பர்கள் இருவருக்கு அதிஷ்டலாப சீட்டிழுப்பில் பெருந்தொகை பணம் விழுந்து அவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் உள்ள நண்பர்கள் இருவருக்கே இந்த அதிஷ்ட இலாபம் கிடைத்துள்ளது.

வாங்கூவரைச் சேர்ந்த வேய் ஹிங் யுவென் மற்றும் டாங்க் மீ டேங்க் ஆகிய நண்பர்களே இவ்வாறு பரிசு வென்றுள்ளனர்.

ஒரு மில்லியன் டொலர்

கடந்த 11ஆம் திகதி சீட்டிழுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த சீட்டிழுப்பில் ஒரு மில்லியன் டொலர்களை அவர்கள் வெற்றியீட்டியுள்ளனர்.

இந்த நண்பர்கள் நீண்ட காலமாக ஒன்றாக இணைந்து லொத்தர் சீட்டிழுப்பில் பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லொத்தர் சீட்டில் பரிசு கிடைக்கப்பெற்றமையை முதலில் நம்பவில்லை எனவும் பின்னர் இருவரும் அதனை உறுதி செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version