ஏனையவை

இன்றைய ராசி பலன் : 21 நவம்பர் 2024 – Daily Horoscope

Published

on

இன்றைய ராசி பலன் : 21 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 21.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 6, வியாழக் கிழமை, சந்திரன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் மூலம், பூராடம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காது. மாணவர்கள் கல்வியில் சில தடைகளைச் சந்திக்க வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். பணியிடத்தில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். திருமணத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் என்பதால் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிக்க முடியும். உங்கள் உறவில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நிதிநிலை சிறப்பான முன்னேற்றம் அடையும். எந்த ஒரு செயலிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். இதனால் நினைத்த இலக்கை சிறப்பாக அடைய முடியும். நண்பர்களின் ஆதரவு பெறுவீர்கள்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் சில புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் தொடர்பாக உங்களின் முயற்சி சிறப்பான வெற்றியை தரும். குழந்தைகள் எதிர்காலம் தொடர்பான முதலீடு செய்ய நினைப்பீர்கள். உங்கள் மனதில் சில விஷயங்கள் தேவையற்ற கவலையை தரக்கூடியதாக இருக்கும். தந்தையுடன் உறவு மேம்படும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று எந்த வேலை செய்தாலும் முழு ஆர்வத்துடன் செய்ய அதில் சிறப்பான வெற்றி பெறலாம். சகோதரர்களின் ஆலோசனை உங்கள் தொழிலை முன்னேற்ற உதவும். வணிகம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். புதிய யோசனைகளுடன் செயல்படுவீர்கள். இன்று உங்கள் ரகசியங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இன்று நெருக்கமான ஒருவரிடம் இருந்து சில நல்ல செய்திகள் கேட்பீர்கள்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் நபர்களிடமிருந்து சில நல்ல செய்தி கிடைக்கும். குழந்தைகளுடன், குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். இன்று பண பரிவர்த்தனை விஷயத்தில் கவனமாக இருக்கவும். குடும்ப தகராறுகள், வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு, உறவினர்கள் மூலம் நல்ல செய்தி தேடி வரும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று பணி புரியும் இடத்தில் உங்கள் வேலையை முடிப்பதில் சக ஊழியர்களின் ஆலோசனை தேவைப்படும். பிள்ளைகளின் கல்வி தொடர்பாக அலைச்சல் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். இன்று குடும்ப செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் படிப்பிலும், விளையாட்டுப் போட்டியிலும் எதிர்பார்த்த வெற்றியை பெற கூடுதல் கவனத்துடன் செயல்படவும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்று எதிர்காலத்திற்கான சேமிப்பு திட்டங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். தேவையற்ற பயணங்கள், பண பரிவர்த்தனைகளை தவிர்ப்பது நல்லது. நண்பர்களுடன் ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். இன்று உடல் நலனில் சில பிரச்சினைகள் சந்திக்க நேரிடும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிகம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப சொத்து தொடர்பான சட்ட தகராறுகள் விஷயத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று ஆன்மீக நிகழ்ச்சிகள், வீட்டில் சுப நிகழ்வுகள் தொடர்பான விஷயத்தில் ஈடுபடுவீர்கள். அது தொடர்பாக பணம் அதிகமாக செலவாகும். பணியிடத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். இன்று உங்கள் வேலையை தள்ளி போட வேண்டாம். இன்று புதிய சலுகைகள் கிடைக்கும். சூழல் சாதகமாக இருக்கும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை, தொழில் தொடர்பாக சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் இந்த செயலிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. இன்று புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். காதல் வாழ்க்கையில் புரிதல் சிறப்பாக இருக்கும். இன்று தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் அலைச்சல் ஏற்படும். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் ஆதரவு எதிர்பார்த்ததை விட குறைவாகவே கிடைக்கும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பதவி, புதிய வாய்ப்புகள் கிடைக்கும். காதல் விஷயத்தில் புரிதல் சிறப்பாக இருக்கும். உங்களின் காதலுக்கு குடும்பத்தில் அங்கீகாரம் பெறலாம். பிள்ளைகளின் படிப்பு தொடர்பான கவலை ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். இன்று எந்த செயலிலும் சிறப்பான வெற்றியை எதிர்பார்க்கலாம்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். பணியிடத்தில் எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. இல்லையெனில் நிதி இழப்பைச் சந்திக்க நேரிடும். இன்று ஏதேனும் ஒரு விஷயத்தை நினைத்து மன அழுத்தத்துடன் இருப்பீர்கள். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் இருந்த தடைகள் நீங்கும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று புதிய வீடு, மனை தொடர்பான சொத்து வாங்கும் விஷயத்தில் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டிய சூழல் இருக்கும். இன்று எந்த ஒரு பண பரிவர்த்தனைகளிலும் கூடுதல் கவனம் தேவை. வாழ்க்கைத் துணைக்கு பரிசு வழங்க நினைப்பீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்து வெற்றி கிடைக்கும்.

Exit mobile version