ஏனையவை

விஜய்யின் 69வது படம் இந்த தெலுங்கு பட கதையை போல தானா?… வைரலாகும் தகவல்

Published

on

விஜய்யின் 69வது படம் இந்த தெலுங்கு பட கதையை போல தானா?… வைரலாகும் தகவல்

நடிகர் விஜய்யின் திரைப்படம் குறித்து பேசுவது இந்த 69வது படமே கடைசியாக இருக்கப்போகிறது.

காரணம் அரசியலில் முழு நேரம் ஈடுபட இருக்கும் விஜய் தனது 69வது படத்துடன் நடிப்பதை நிறுத்த முடிவு செய்துவிட்டார்.

69வது படம் தான் கடைசி படம் என எழுதும் போது கொஞ்சம் கஷ்டமாக இருந்ததாக விஜய் கூறியதாக கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

தற்போது விஜய்யின் 69வது படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் 69வது படத்தின் கதை ஒரு தெலுங்கு படத்தின் கதை தாக்கத்தை கொண்டது என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அது என்ன படம் என்றால் கடந்த 2023ம் வருடம் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான Bhagavanth Kesari தானாம். இப்பட கதையை அறிந்த ரசிகர்கள் நல்ல பட கதை, தரமான நடிகர்கள் தேர்வு தான் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

Exit mobile version