ஏனையவை

வரலாற்று சாதனை – நாடாளுமன்றம் செல்லும் 150 க்கும் மேற்பட்ட புதிய எம்.பி.க்கள்

Published

on

2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 196 உறுப்பினர்களில் 146 பேர் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளமை வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக, 29 தேசிய பட்டியல் ஆசனங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

150 க்கும் மேற்பட்ட முதல் முறை எம்.பி.க்களை வரவேற்க நாடாளுமன்றம் தயாராகி வரும் நிலையில், தேசிய பட்டியல் உறுப்பினர்களிலும் புதியவர்கள் இருக்கலமென எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் நடைபெற்ற 2024 பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 141 ஆசனங்களை பெற்று அமோக வெற்றியீட்டியது.

தேசிய மக்கள் சக்தியில் வெற்றிபெற்ற 141 பேரில் 130 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு புதியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பெற்றுக்கொண்ட 35 நாடாளுமன்ற இடங்களில் எட்டு புதிய எம்.பி.க்கள் தெரிவாகியுள்ளனர்.

27 பேர் இதற்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்தவர்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), சார்பாக ஒரே ஒரு புதிய எம்.பி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல, இலங்கைத் தமிழரசு கட்சி ஆறு இடங்களைப் பெற்றது, அதில் மூன்று புதிய எம்பிக்கள் வெற்றி பெற்றனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகவும் (SLMC) புதிய உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், புதிய ஜனநாயக முன்னணி (NDF) இந்த ஆண்டு தேர்தலில் மூன்று எம்பி ஆசனங்களைப் பெற்றது, அவர்கள் அனைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

 

Exit mobile version