ஏனையவை

இடியுடன் கூடிய மழை: பொது மக்களுக்கு வெளியான அறிவிப்பு

Published

on

இடியுடன் கூடிய மழை: பொது மக்களுக்கு வெளியான அறிவிப்பு

மேல், மத்திய, சப்ரகமுவ,தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது.

திணைக்களத்தினால் இன்றையதினம் (17.11.2024) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவமற்றும் மத்திய மாகாணங்களில்சில இடங்களில் 75 மி.மீ அளவானஓரளவு பலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்சில இடங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவாமாகாணங்களிலும் காலி (Galle) மற்றும் மாத்தறை (Matara) மாவட்டங்களிலும்சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில்தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Exit mobile version