ஏனையவை
இன்றைய ராசி பலன் : 17 நவம்பர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசி பலன் : 17 நவம்பர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 17.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 2, ஞாயிற்று கிழமை, சந்திரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் உள்ள சேர்ந்த சுவாதி, விசாகம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான மாற்றங்களை காணலாம். இன்று உங்களின் கடின உழைப்பு எதிர்காலத்தில் நன்மை பயக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். இன்று மன நிம்மதி அதிகரிக்கும். கடின நேரத்தில் நண்பர்கள் உதவ முன்வருவார்கள். துணைக்குப் பரிசு வாங்கி கொடுக்க நினைப்பீர்கள். உடல்நலம் பேணுவதில் அக்கறை காட்டவும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று எதை செய்தாலும் கூடுதல் கவனம், முடிவெடுப்பதில் நிதானத்துடனும் செயல்படவும். பணியிட சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். சக ஊழியர்களின் ஆதரவு, உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று எந்த வேலை செய்தாலும் அதில் சிறப்பான வெற்றி எதிர்பார்க்கலாம். இன்று உங்களின் விருப்பமான விஷயத்தை செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களுடன் விருந்து, விழாக்களில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பணபலம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. திருமணமானவர்களுக்குத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்களின் புதிய யோசனை உங்களை முன்னோக்கி நகர்த்த உதவும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் உல்லாசமாக நேரத்தைக் கழிப்பீர்கள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் தொடர்புடையவர்களுக்கு பெரிய பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளின் செயல்பாடு மகிழ்ச்சியை தரும். இன்று வேடிக்கை, பொழுது போக்கு விஷயத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களின் நிலுவையில் உள்ள வேலைகளை முடித்து மகிழ்வீர்கள். சிலருக்கு வயிறு வலி போன்ற ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் அதில் லாபம் கிடைக்கும். நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் குறித்து விவாதிப்பீர்கள். இன்று எதிலும் பாதகமான சூழ்நிலை மாறும். கோபத்தைக் கட்டுப்படுத்திச் செயல்பட வேண்டிய நாள். இல்லையெனில் உறவில் விரிசல் ஏற்படும். வியாபாரம் தொடர்பாக திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் கல்வி, விளையாட்டுப் போட்டி தொடர்பான விஷயத்தில் சிறப்பான வெற்றி பெறுவார்கள். வியாபாரத்தில் புதிய வருமானம் கிடைக்கும். இன்று உங்களின் அலைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வானிலை மாற்றத்தால் ஆரோக்கிய குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் முக்கிய வேலையை முடிப்பதில் துணையின் ஆதரவும், அனுசரணையும் உங்களுக்கு உதவும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நிதிநிலை வலுவாக இருக்கும். குழந்தைகளின் வேலை, திருமணம் தொடர்பாக சில நல்ல செய்திகள் கிடைக்கும். இன்று உங்களின் பேச்சைக் கேட்டு பிறர் நடப்பார்கள். குடும்பத்திலும், பணியிடத்திலும் உங்களின் மரியாதை அதிகரிக்கும். இன்று நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். வண்டி, வாகன பயன்பாட்டில் கவனம் தேவை.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வீட்டின் தேவைகளை நிறைவேற்ற சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அது தொடர்பாக செலவு விஷயத்தில் கவனம் தேவை. இன்று நீதிமன்ற வழக்கு விஷயத்தில் கவனமாக செயல்படவும். பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையுடன் செயல்படவும். அலுவலகத்தில் பிறரின் ஒத்துழைப்பு குறைவாகவே கிடைக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று துணையின் ஆதரவால் எந்த செயலையும் சிறப்பாக செய்து மகிழ்வீர்கள். இன்று சிலருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். உங்களின் பேச்சில் கட்டுப்பாடு அவசியம். சட்டப்பூர்வமான விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்படவும். குடும்ப பிரச்சினைகளை பொறுமையுடன் கையாள்வது நல்லது.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை அல்லது வியாபாரம் தொடர்பாக சில நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். இதனால் வருத்தம் அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் மனநிம்மதி கிடைக்கும். இன்று பணியிடத்தில் யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று ஆபத்தான வேலையில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் வருவாய் குறைய வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பு விஷயத்தில் கவனத்துடன் செயல்படவும். இன்று சொந்தத் தொழிலில் அனுபவசாலிகள் ஆலோசனை பயன் தரக்கூடியதாக இருக்கும். புதிய வருமான வாய்ப்புகள் பெறுவீர்கள். கடன் வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. கடனை தவிர்ப்பது நல்லது.