ஏனையவை
ரணில் அரசின் சட்டத்திற்கு முரணான செயற்பாடு அம்பலம்
ரணில் அரசின் சட்டத்திற்கு முரணான செயற்பாடு அம்பலம்
கடந்த ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)தலைமையிலான அரசாங்கம் அனுமதியின்றி சட்டத்திற்கு முரணான வகையில் நுகர்வோர் விவகாரசபைக்கு விசாரணைப்பிரிவின்தலைவர் ஒருவரை நியமித்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணைப் பிரிவின் தலைவர் நீக்கப்பட்டு, குறித்த பிரிவு கலைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விசாரணைப்பிரிவிற்கு தலைவர் ஒருவரை நியமிப்பதற்கு நிதியமைச்சு மற்றும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி பெறப்படவேண்டும். ஆனால் அவற்றின் அனுமதி பெறப்படாமலேயே குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு நியமிக்கப்பட்ட ஊடக அதிகாரியும் தற்போதைய தலைவரால் நீக்கப்பட்டுள்ளார்.
நியமனம் தொடர்பில், நுகர்வோர் அதிகார சபையின் தற்போதைய தலைவர், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் கேட்டபோது, இந்த நியமனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
முன்னாள் வர்த்தக அமைச்சர் தன்னிச்சையாக இந்த நியமனத்தை வழங்கியுள்ளமை இதன்மூலம் தெரியவந்துள்ளது.