ஏனையவை

மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் மனோ: உறுதியளித்தார் சஜித்

Published

on

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மனோ கணேசனுக்கு (Mano Ganesan) தேசியப் பட்டியல் ஊடாக உறுப்புரிமையை வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் (14.11.2024) இடம்பெற்றது.

160 நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து 196 பேர் நேரடியாகவும் 29 பேர் தேசியப் பட்டியல் ஊடாகவும் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட உள்ளதுடன், 17.1 மில்லியன் மக்கள் இம்முறை வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர்.

கொழும்பு (Colombo) மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்நிலையில், மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியல் ஊடாக உறுப்புரிமையை வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் காலத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த தேசியப்பட்டியல் பதவி வழங்கப்படுவதாக மேலும் தெரியவந்துள்ளது.

Exit mobile version