ஏனையவை

இன்றைய ராசி பலன் : 14 நவம்பர் 2024 – Daily Horoscope

Published

on

இன்றைய ராசி பலன் : 14 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 14.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 28, வியாழக் கிழமை, சந்திரன் மீனம், மேஷம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்மம் ராசியில் பூரம், உத்திரம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று பண விஷயத்தில் சிறப்பான நாளாக இருக்கும். புதிய சொத்து வாங்க வாய்ப்பு உள்ளது. வியாபாரம் தொடர்பாக புதிய ஒப்பந்தம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த மன அழுத்தம் விலகும். மனதளவில் நிம்மதியாக உணர்வீர்கள். இன்று வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் சற்று மந்தமாக இருக்கும். திடீர் பண இழப்பு ஏற்படும் என்பதால் பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்து இருக்கும். மன மகிழ்ச்சியும், அன்பும் அதிகரிக்கும். காதல் விஷயத்தில் கவனத்துடன் செயல்படவும். ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வியாபாரத்தில் மும்முரமாகச் செயல்படுவீர்கள். உங்கள் வேலையில் வெற்றி கிடைக்கும். தைரியமாக எதிலும் செயல்படவும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மனஉளைச்சல் குறையும். நிதி விஷயத்தில் சிரமம் ஏற்படும். திருமண வாழ்வில் சச்சரவுகள் இருக்கும். நீதிமன்ற வழக்கு விஷயத்தில் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் தரக்கூடிய நாள். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். இன்று வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றும் விஷயத்தில் அலைச்சல்கள் ஏற்படும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று மன உளைச்சல் அதிகமாக இருக்கும். உங்கள் செலவுகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். காதல் விஷயத்தில் மகிழ்ச்சி உண்டாகும். திருமண வாழ்க்கையில் துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உங்கள் பயணம் வெற்றியை தரும். பொழுதுபோக்கிற்காக அதிக பணம் செலவிட வாய்ப்புள்ளது. உங்களின் வருமானத்தை விட செலவுகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலைகளை சிறப்பான வெற்றியை எதிர்பார்க்கலாம். இன்று நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் கவனமாகவும், திட்டமிட்டும் செயல்படுவது நல்லது. காதல் விஷயத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்திருக்கும். திருமண வாழ்க்கையில் விட்டுக்கொடுத்துச் சென்றால் நெருக்கம் அதிகரிக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களுக்கும், பணியிடத்திலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். உங்கள் வேலையை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படவும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். உங்கள் வருமானம் அபரிமிதமாக உயரும். பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது. உங்களின் நிதிநிலை முன்னேற்றம் தரும். திருமண வாழ்க்கையில் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். காதல் விஷயத்தில் சில எதிர்ப்புகளும் வரலாம். இன்று நீங்கள் தேவைக்கேற்ப பண வரவு கிடைக்கும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று முக்கிய வேலைகளை செய்து முடிப்பதில் சில தடைகள் ஏற்படும் என்பதால் மனவருத்தம் அடைவீர்கள். இன்று குடும்பத்தில் சில சர்ச்சைகள் ஏற்படும். பணம் விஷயத்தில் ஆதாயம் ஏற்படும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லவும். வேலை தொடர்பாக அதிர்ஷ்டசாலியாக உணர்வீர்கள். இன்று தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. இதனால் பணச் செலவு, ஆரோக்கியமும் மோசம் அடையும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். உங்களின் உடல் நலம் சற்று பலவீனமாக இருக்கும். காதலில் வெற்றி பெறுவீர்கள். நீதிமன்ற வழக்கு விஷயத்தில் சாதகமாக பலன்கள் கிடைக்கும். உங்களின் தேவைக்கேற்ற லாபம் பெறுவீர்கள். வருமான உயர்வால் சேமிக்க முடியும். உங்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். இன்று உங்கள் உணவு மற்றும் பானம் விஷயத்தில் கவனம் தேவை.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். மனதில் சில வருத்தங்கள் ஏற்படும். இன்று எதிர்பார்த்ததை விட செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தொழில் சார்ந்த விஷயத்தில் சிறப்பான வெற்றி கிடைக்கும். உங்கள் வேலை தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. எந்த இடத்திலும் உங்கள் பேச்சில் தைரியம் கடைப்பிடித்தாலும், நிதானத்தைக் கைவிட வேண்டாம்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று காதல் விஷயத்தில் சிறப்பான நாளாக இருக்கும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை மூலம் ஆதரவு உண்டு. உங்கள் வேலையை மாற்ற நினைப்பவர்கள் சிந்தித்து செயல்படவும். குடும்ப வாழ்க்கையில் மன கசப்புகள் நிறைந்திருக்கும். இன்று அலைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் அதில் முன்னேற்றம் எதிர்பார்க்கலாம்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பம் தொடர்பாக மகிழ்ச்சியான சூழல் இருக்கும். நண்பர்கள், உறவினர்களுடன் நல்லுறவைப் பேணலாம். இன்று சிலரின் பேச்சால் மன உளைச்சல் அதிகரிக்கும். இன்று முன்னேற்றத்திற்கான முயற்சியில் எதிர்பார்த்த நிதி நன்மைகள் பெறுவீர்கள். வீட்டு வேலைகளை முடிப்பதில் அதிக நேரம், உழைப்பு தேவைப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று பயணங்கள் செல்வது மகிழ்ச்சியை தரும். இன்று உங்களின் தைரியம், வீரம் அதிகரிக்கும். கல்வித்துறையில் சிறப்பாக செயல்படுவீர்கள். காதல் விஷயத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தந்தையுடன் அனுபவம் மேம்படும். பெண்கள் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

Exit mobile version