ஏனையவை
கங்குவா திரை விமர்சனம்
இந்திய சினிமவில் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி industry என அனைத்தும் ஒரு Pan Indian Hit படத்தை கொடுத்துள்ளது.
நம் தமிழ் சினிமா தொடர்ந்து இதில் சறுக்கி வர, இதன் பெரும் முயற்சியாக சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக இன்று வெளிவந்துள்ள கங்குவா பதில் சொன்னதா, பார்ப்போம்.
சூர்யா கோவாவில் ஒரு பவுண்டி ஹண்டராக இருக்க, கே எஸ் ரவிகுமார் சொல்லும் வேலைகளை செய்து வருகிறார், அப்போது ஒரு சிறுவன் சூர்யாவிடம் வர, அவனை தேடி மிகப்பெரிய ரஷ்யா கும்பல் ஒன்று வருகிறது.
அவர்கள் அந்த சிறுவனை வைத்து ஏதோ எக்ஸ்பிரிமெண்ட் செய்து வருகின்றனர், அந்த சிறுவனை ரஷ்யா கும்பல் தூக்கி செல்ல, அங்கிருந்து கதை கற்காலத்திற்கு செல்கிறது. 5 நிலங்கள் கொண்ட ஒரு ஊரில், ரோமானிய அரசன் அந்த 5 நிலங்களை கைப்பற்ற நினைக்க, போஸ் வெங்கட்-யை வைத்து 5 நிலங்களை கைப்பற்ற முடிவு செய்கின்றனர்.
போஸ் வெங்கட் பெருமாச்சி, அராத்தி நிலத்திற்கும் எப்படியோ சகுனி வேலை பார்த்து சண்டை மூட்டிவிட, பிறகு பெரிய போர் உருவாகிறது. இந்த போர்-ல் வெற்றி யாருக்கு, நிகழ் காலத்தில் அந்த சிறுவன் என்ன ஆனான், என்பதே மீதிக்கதை.
இரண்டு உலகம் அந்த இரண்டு உலகத்திலும் சூர்யா ஒரு பையனை காக்க வேண்டும் என்ற கதைக்களத்தை தேர்ந்த்டுத்த சிவா அதில் தன்னால் முடிந்த அளவிற்கு ஒரு பிரமாண்ட பேண்டஸி படத்தை எடுக்க முயற்சித்துள்ளார்.
இதில் சூர்யா ஒன் மேன் ஷோ, மொத்த படத்தையும் தன் யானை பல தோளில் சுமந்து செல்கிறார், ப்ரான்சிஸ் ஆக கலகலப்பாக 20 நிமிடம் அவர் கதாபாத்திரம் சென்றாலும், கங்குவாக படம் முழுவதும் மிரட்டியுள்ளார்.
அதிலும் கிளைமேக்ஸில் இந்த வயதிலும் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் அவர் செய்யும் சண்டைக்காட்சிகள் பிரமிப்பு.
படத்தின் நிகழ்காலம் 20-30 நிமிடமே வருகிறது, படம் முழுவதும் கங்குவாவை சுற்றி நகர்கிறது, தான் தண்டனை கொடுத்த நட்ராஜின் மகனை காக்கும் பொறுப்பை ஏற்கும் சூர்யா, நிகழ் காலத்தில் ஆராய்ச்சி கூடத்தில் தப்பித்த சிறுவனை காப்பாற்ற போராடும் சூர்யா, இதில் கங்குவா உலகத்தை சிவா உருவாக்கிய விதம் மெய் சிலிர்க்க வைக்கிறது.
அதிலும் முடிந்த அளவிற்கு ரியல் லொக்கேஷனில் வெற்றியின் ஒளிப்பதிவில் மிக தத்ரூபமாக காட்ட முயற்சித்துள்ளார், இரண்டாம் பாதியில் முதலையுடன் வரும் சண்டை காட்சி ஹாலிவுட்டிற்கு நிகராஜ சிஜி வேலைப்பாடு.
ஆனால், எப்போதும் சிவா படத்தில் ஒரு எமோஷ்னல் ஒர்க் அவுட் ஆகும், அதை வைத்து அழகாக திரைக்கதையை எடுத்து செல்வார், இதில் அப்படி பல காட்சிகள் இருந்தும் எதோ எமோஷ்னல் காட்சிகள் ஈர்க்க வில்லை.
போதாத குறையாக படத்தில் பெரும் இரைச்சல், எல்லோரும் கத்திக்கொண்டே இருப்பது ஒரு கட்டத்திற்கு மேல் போதும்ப்பா மெதுவா பேசுங்க என்று சொல்லும் நிலை வருகிறது. பாபி தியோல் வழக்கம் போல ஹை பிட்சில் பேசும் ஒரு ஹிந்தி வில்லன், அவ்வளவே.
DSP இசையில் தலைவனே பாடல் மிரட்டல், பின்னணி இசை கொஞ்சம் சத்தத்தை குறைத்திருக்கலாம், வெற்றி ஒளிப்பதிவு கங்குவா உலகம் சிறப்பாக இருந்தாலும், நிகழ்காலம் பெரும் செயற்கைதனமாக இருக்கிறது.
சூர்யா அரக்கதனமான உழைப்பு. படத்தின் கதை டெக்னிக்கல் ஒர்க், குறிப்பாக சிஜி வேலைகள் மற்றும் செட் ஒர்க். படத்தின் கிளைமேக்ஸ்
எமோஷ்னல் காட்சிகள் பெரிதும் ஒர்க் அவுட் ஆகாமல் போனது. கொஞ்சம் இரைச்சலை தவிர்த்து இருக்கலாம்.
மொத்தத்தில் ஒரு புதிய அனுபவத்திற்கும், சூர்யாவின் கடின உழைப்பிற்கும் கங்குவாவை காணலாம்.
3/5