ஏனையவை
தேர்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகளுக்கு வெளியான அறிவிப்பு
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்கெடுப்புக் கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அரச அலுவலர்கள் அனைவரும் பக்க சார்பின்றி செயற்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அரச அலுவலர்கள் அனைவரும் பொறுப்புடனும் புரிந்துணர்வுடனும் கூர்ந்த கவனத்துடனும் எவருக்கும் விசேட கவனிப்பை செலுத்தாமல் செயற்பட வேண்டும்.
தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில் வாக்காளர்களுடனும் பொதுத் தேர்தல் வேட்பாளர்களுடனும் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களுடனும் நட்புறவுடன் மற்றும் சகிப்புத்தன்மையுடன் செயற்பட வேண்டும்.
இந்நிலையில், தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில் தங்களுக்கு வழங்கப்படும் கடமைகளைச் சிறப்பாகவும் பொறுப்புடனும் நிறைவேற்ற வேண்டும்.
தேர்தல் ஆணைக்குழுவுக்கும் நீதிமன்றத்துக்கும் மாத்திரமே நீங்கள் பொறுப்புக் கூற வேண்டும். எனவே பக்கச்சார்பின்றி பொறுப்புடனும் நியாயமான முறையிலும் தங்களது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.