ஏனையவை
வெற்றிக்கு நன்றிக்கடன் தீர்த்த டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தனது நிர்வாகத்துக்கு ஏற்ப நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார்.
அந்த வகையில், அவரின் வெற்றிக்கு உதவிய, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் மற்றும் அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி ஆகியோரை அந்த நாட்டின் செயல்திறன் துறையின் தலைவர்களாக நியமனம் செய்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் 2025 ஜனவரி மாதம் 20ம் திகதியன்று அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ளார்.
அமெரிக்காவை பொறுத்தவரை அரசின் செயல்திறன் துறையே பொருளாதாரம், நிதி மேலாண்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது.
எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் அடிப்படையில் தொழிலதிபர்களாக செயற்படுகின்றனர். அவர்கள் ட்ரம்பின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார்கள்.
இதில் எலான் மஸ்க் டொனால்ட் ட்ரம்பின் பிரசாரத்துக்கு நிதியுதவி செய்தார். விவேக் ராமசாமி, டொனால்ட் டிரம்பின் பிரசாரத்தில் பெரும் பங்கு வகித்தார்.
இதனையடுத்தே அவர்கள் இருவருக்கும் டொனால்ட் டிரம்ப் முக்கிய பொறுப்பை வழங்கி உள்ளார்.