ஏனையவை

கொழும்பு பங்குச் சந்தையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

Published

on

கொழும்பு பங்குச் சந்தையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (13)136.20 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 13,125.19 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், இன்றைய மொத்த புரள்வு 6.9 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version