ஏனையவை

நானியின் சரிபோதா சனிவாரம் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா

Published

on

நானியின் சரிபோதா சனிவாரம் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா

விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நடிகர் நானி நடித்து வெளிவந்த படம் அடடே சுந்தரா. இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. அதை தொடர்ந்து இந்த கூட்டணி மறுபடியும் இணைந்துள்ளது.

இரண்டாவது முறையாக இவர்கள் கூட்டணியில் விவேக் இயக்கத்தில் நடிகர் நானி நடித்து ஆகஸ்ட் 29 வெளிவந்துள்ள சரிபோதா சனிவாரம் படம் ஒரு யுனிக் கான்செப்டில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா, நானி மற்றும் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

சுமார் ரூ.90 கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. முதல் நாளில் இந்த படம் உலகம் முழுவதும் ரூ. 24.11 கோடி வரை மொத்தமாக வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இப்படம் இரண்டு நாட்கள் முடிவில் உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இரண்டு நாட்களில் ரூ. 40 கோடி வசூல் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version