இலங்கை
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்களின் நகர்வுகள்
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்களின் நகர்வுகள்
இலங்கை சந்தித்த பாரிய பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் நாட்டின் அரசியல் களத்தில் ஒரு திருப்பமாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவிருக்கின்றது.
மக்கள் மனதில் ஸ்தம்பித்து நிற்கும் அடுத்த ஜனாதிபதி யார் என்பதில் நாலா பக்கமும் பல்தரப்பட்ட கருத்துக்களும் எதிர்பார்ப்புக்களும் குவிந்து கொண்டிருக்கின்றன.
சரிந்து விழுந்த நாட்டின் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாய் துளிர்விட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இனி வரும் காலங்களில் அதனை எப்படி எதிர்நோக்குவது என்னும் மக்களின் கேள்விகளும் இலங்கையின் அடுத்த நகர்வு குறித்த சர்வதேசங்களின் எதிர்ப்பாரப்புக்களும் வரப்போகும் அரசியல் களத்தை நோட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.
எனவே, நாட்டில் சிங்கள, தமிழ் மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்பும் ஒரு சிறந்த குடியரசு தலைவரை தெரிவு செய்வார்கள் என எல்லோர் மத்தியிலும் எதிர்பார்ப்பு எழுந்து நிற்கின்றது.
இந்நிலையில், இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளின் தலையீடு அதிகமாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா குறிப்பிட்டுள்ளார்.