இலங்கை

ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்த மனு விசாரணை

Published

on

ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்த மனு விசாரணை

தற்போதைய அரசியலமைப்பிற்கு அமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் என்பது தெளிவாக உள்ளது என சட்டமா அதிபர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான மனு இன்று (08) விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்க டி சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி பூர்வாங்க ஆட்சேபனைகள் எழுப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் திகதி தொடர்பில் விளக்கமளிக்கும் வரை, ஜனாதிபதித் தேர்தல் நடத்துவதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை பரிசீலிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, பிரிதி பத்மன் சூரசேன மற்றும் எஸ். துரைராஜா ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு முன் இந்த மனு பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

Exit mobile version