ஏனையவை

மக்களால் கொண்டாடப்படும் அரண்மனை 4.. முதல் முறையாக அரண்மனை 5 படம் குறித்து பேசிய சுந்தர் சி..

Published

on

மக்களால் கொண்டாடப்படும் அரண்மனை 4.. முதல் முறையாக அரண்மனை 5 படம் குறித்து பேசிய சுந்தர் சி..

சுந்தர் சி இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அரண்மனை. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2ஆம் பாகம் மற்றும் 3ஆம் பாகம் வெளிவந்தது.

தொடர் வெற்றியினால் சுந்தர் சி மீண்டும் அரண்மனை 4 திரைப்படத்தை உருவாக்கினார். மக்களிடையே எதிர்பார்ப்பில் இருந்த இப்படம் நேற்று உலகளவில் வெளிவந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

தமன்னா, ராஷி கன்னா, கோவை சரளா, யோகி பாபு என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்க சுந்தர் சி கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

முதலில் இந்த ரோலில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த நிலையில், கால்ஷீட் இல்லாத காரணத்தினால் அவர் வெளியேற, சுந்தர் சி அந்த ரோலில் நடிக்க முடிவு செய்தாராம். முதல் நாள் மட்டுமே ரூ. 7 கோடி வரை அரண்மனை திரைப்படம் வசூல் செய்துள்ள என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் அரண்மனை 5 குறித்து பேசியுள்ளார் சுந்தர் சி. இதில் “அரண்மனை 5 படத்தின் தலையெழுத்து அரண்மனை 4ல் தான் இருக்கிறது. அரண்மனை 4 வெற்றிபெற்றால் அரண்மனை 5 உருவாகும்” என கூறியுள்ளார்.

Exit mobile version