ஏனையவை

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஈரான் அமைச்சருக்கு பிடியாணை: Interpol சிவப்பு எச்சரிக்கை

Published

on

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஈரான் அமைச்சருக்கு பிடியாணை: Interpol சிவப்பு எச்சரிக்கை

குண்டுவெடிப்பு தொடர்பாக ஈரானின் உள்விவகார அமைச்சரை கைது செய்யுமாறு அர்ஜென்டினா இன்டர்போலிடம் கொரிக்கை வைத்துள்ளது.

பியூனஸ் அயர்ஸில் உள்ள யூத சமூக மையத்தின் மீது குண்டுவீசி 85 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை கோரப்பட்டுள்ளது. ஈரானின் உள்விவகார அமைச்சர் Ahmad Vahidi தற்போது பாகிஸ்தான் சுற்றுப்பயணம் முடித்து இலங்கை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அர்ஜென்டினாவின் வேண்டுகோளுக்கு இணங்க இன்டர்போல் அவரை கைது செய்ய சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமைச்சர் Ahmad Vahidi-ஐ இலங்கை அல்லது பாகிஸ்தான் கைது செய்ய வேண்டும் என்றும் அர்ஜென்டினா கேட்டுக்கொண்டுள்ளது.

ஏப்ரல் 12 அன்று, அர்ஜென்டினா நீதிமன்றம் 1994ல் புவெனஸ் அயர்ஸில் உள்ள யூத சமூக மையத்திற்கு எதிரான தாக்குதலுக்கு ஈரான் மீது குற்றம் சாட்டியது. மட்டுமின்றி 1992ல் இஸ்ரேல் தூதரகத்தின் மீது குண்டுவீசி தாக்கியதில் 29 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திலும் ஈரானுக்கு தொடர்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

ஆனால் 1994ல் நடந்த தாக்குதலுக்கு எவரும் பொறுப்பேற்கவில்லை என்பதுடன், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்தும் தகவல் இல்லை. இருப்பினும் ஈரான் ஆதரவுக் குழுவான ஹிஸ்புல்லா ஈரானின் வேண்டுகோளுக்கு இணங்க அதைச் செயல்படுத்தியது என்றே சந்தேகிக்கப்படுகிறது.

ஈரான் இதுவரை பியூனஸ் அயர்ஸ் தாக்குதலுக்கு மறுப்பு தெரிவித்தே வந்துள்ளது. இந்த நிலையிலேயே அர்ஜென்டினா வெளிவிவகார அமைச்சரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

1994 தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்றும், 85 பேர்கள் கொல்லப்பட காரணமானவர்களில் ஒருவர் ஈரானின் தற்போதைய உள்விவகார அமைச்சர் Ahmad Vahidi என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2006ல் ரஃப்சஞ்சனி மற்றும் வஹிதி உட்பட எட்டு ஈரானியர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அர்ஜென்டினா நீதிமன்றங்கள் கோரின. 2013ல் ஜனாதிபதி Cristina Kirchner ஈரானுடன் ஒரு குறிப்பாணையில் கையெழுத்திட்டார்,

அதன் கீழ் அர்ஜென்டினா சட்டத்தரணிகள் அர்ஜென்டினாவிற்கு வெளியே தொடர்புடைய சந்தேக நபர்களை விசாரிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் யூத சமூகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஜனாதிபதி Cristina Kirchner ஈரானுடன் கூட்டு சேர்ந்த இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயல்பவதாக குற்றஞ்சாட்டினர்.

 

Exit mobile version