ஏனையவை

கடனை அடைப்பதற்காக சுவிஸ் அருங்காட்சியகத்தில் கொள்ளையடித்த பிரித்தானிய சகோதரர்கள்…

Published

on

பிரித்தானிய சகோதரர்கள் இருவர், சுவிஸ் அருங்காட்சியகம் ஒன்றில் பல மில்லியன் மதிப்புள்ள கலைப்பொருட்களைக் கொள்ளையடித்து சிக்கிக்கொண்ட நிலையில், தங்கள் கடனை அடைப்பதற்காக தாங்கள் கொள்ளையடித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்கள்.

பிரித்தானிய சகோதரர்களான Stewart மற்றும் Louis Ahearne, 2019ஆம் ஆண்டு, மற்றொரு நபருடன் சேர்ந்து, ஜெனீவாவிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றில் கொள்ளையடித்துள்ளார்கள்.

கொள்ளையடித்த பொருட்களுடன் ஹொங்ஹொங் சென்ற சகோதரர்கள் இருவரும், தாங்கள் கொள்ளையடித்த ஒரு கலைப்பொருளை 80,000 பவுண்டுகளுக்கு விற்றுள்ளார்கள்.

சுவிஸ் பொலிசாரிடம் சிக்கிய சகோதரர்கள், நீதிமன்ற விசாரணையின்போது, தங்களுக்கு இருந்த கடனை அடைப்பதற்காகவே, தாங்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

சகோதரர்களில் மூத்தவரான Stewart Ahearne (45) கூறும்போது, தன் தம்பியாகிய Louis Ahearne (34) கடனில் சிக்கியிருப்பதாகவும், அவரைத் தப்புவிக்க, சுவிட்சர்லாந்திலிருந்து ஒரு பொருளைக் கொள்ளையடிக்கவேண்டும் என்றும் தனக்கு வந்த தொலைபேசி அழைப்பில் ஒருவர் கூறியதாகவும், தன் தம்பியைக் காப்பாற்றவேண்டும் என உள்ளுணர்வு கூற, தான் அந்த கொள்ளையில் பங்கேற்றதாகவும் தெரிவிக்கிறார்.

தங்களுடன் கொள்ளைச் சம்பவத்தில் பங்கேற்ற அந்த மூன்றாவது நபரின் பெயரைக் கூறுவதை சகோதரர்கள் தவிர்க்கிறார்கள். அவர் மோசமான ஆள், அவர் கேட்டால் மறுக்கமுடியாது என்கிறார்கள் அவர்கள்.

வழக்கு விசாரணை தொடர்கிறது…

Exit mobile version