ஏனையவை

வெடித்து சிதறியது உலக புகழ்பெற்ற மவுண்ட் எட்னா எரிமலை!

Published

on

வெடித்து சிதறியது உலக புகழ்பெற்ற மவுண்ட் எட்னா எரிமலை!

இத்தாலியில் மவுண்ட் எட்னா எரிமலை வெடித்து சிதறி தீ குழம்பை வெளியேற்றி வருகிறது.

இத்தாலியின் ரோம் நகரில் இருந்து 500 கி.மீ தொலைவில் சிசிலி தீவு அமைந்துள்ளது.

இந்த சிசிலி தீவில் உலக புகழ்பெற்ற மவுண்ட் எட்னா எரிமலை உள்ளது. மவுண்ட் எட்னா எரிமலை கடல் மட்டத்தில் இருந்து 3,300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

மவுண்ட் எட்னா எரிமலை அடிக்கடி வெடித்து சிதறுவது வழக்கமாக இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் மவுண்ட் எட்னா எரிமலை வெடித்து சிதறி தீ குழம்பை வெளியேற்றி வருகிறது.

பனி மூடிய எட்னா எரிமலை சூடான எரிமலை குழம்பை கக்கி வருவதால் ஒரே புகை மண்டலமாக அப்பகுதி மாறியுள்ளது.

பாட்டியை சந்திக்கும் நெகிழவைக்கும் காட்சிகள்
மேலும் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்டுள்ள சாம்பல் கழிவுகள் மத்திய தரைக்கடல் பகுதியில் தீவில் கரைவது வாடிக்கையாக உள்ளது.

Exit mobile version