ஏனையவை

பிரித்தானியாவில் ஹமாஸ் ஆதரவாளர்கள்

Published

on

பிரித்தானியாவில் ஹமாஸ் ஆதரவாளர்கள்

இஸ்ரேலில் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலை ஆதரிக்கும் இஸ்லாமிய குழு ஒன்றின் உறுப்பினர்கள் பலர் பிரித்தானியாவில் பல நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரகசிய விசாரணை “ஹிஸ்புத் தஹ்ரீர்”என்ற குழுவில் உள்ள மூத்த உறுப்பினர் ஒருவர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட இரகசிய விசாரணையிலேயே பலரது பின்னணியும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஹமாஸ் ஆதரவு நிலை கொண்ட பலர் முதன்மை கட்டுமான நிறுவனங்கள், முதலீட்டு வங்கிகள், மருந்து நிறுவனங்கள், NHS மற்றும் அணுமின் நிலையத்தில் கூட பணியாற்றி வருகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

லண்டனில் முன்னெடுக்கப்படும் பாலஸ்தீன ஆதரவு பேரணிகள் பலஹிஸ்புத் தஹ்ரீர் என்ற அமைப்பு ஒருங்கிணைப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அமைப்பின் பிரித்தானியாவுக்கான தலைவர் அப்துல் வாகிர் என்பவர் வடமேற்கு லண்டனில் வாஹித் ஷைதா என்ற பெயரில் பொது மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அக்டோபர் 7 தாக்குதலை, இஸ்ரேலின் முகத்தில் விழுந்த குத்து என்றே மருத்துவர் வாஹித் குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் 7 தாக்குதலை அடுத்து ஹிஸ்புத் தஹ்ரீர் குழுவானது முன்னெடுத்த லண்டன் பேரணியில், அரபு நாடுகள் தங்கள் பலம் வாய்ந்த ராணுவத்தை இஸ்ரேலுக்கு எதிராக களமிறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

எந்த நடவடிக்கையும் இல்லை மேலும் இந்தப் பேரணியில் தான் புனிதப் போர் என்ற ஜிஹாத் முழக்கம் முதன்முறையாக எழுப்பப்பட்டது. ஆனால் இதே குழு சனிக்கிழமை முன்னெடுக்கப்படும் பாலஸ்தீன ஆதரவு பேரணியில் களமிறங்கலாம் என்ற அச்சமும் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது.

பொறியியல் பட்டதாரியான லுக்மான் முகீம் தமது சமூக ஊடக பக்கத்தில் ஹமாஸ் தாக்குதலை குறிப்பிட்டு, எங்களை பெருமைப்படுத்திய தருணம் என பதிவு செய்திருந்தார்.

இவரே அணுமின் நிலையத்தில் பணியாற்றியவர் என வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பின் இன்னொரு முக்கிய உறுப்பினரான ஜமால் அர்வுட் நிதி தொடர்பான பல்வேறு நிறுவனங்களில் சுமார் 23 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பினை தடை செய்ய பிரித்தானிய அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தம் அளிக்கப்பட்டாலும், இதுவரை அந்த அமைப்பு மீது எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

Exit mobile version