ஏனையவை
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
வங்கக்கடலில் நாளை மறுதினம் புதிய காற்றழுத்த பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வருகிற 14ம் தேதி புதிய காற்றழுத்த பகுதி உருவாகும்.
இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும்.
தொடர்ந்து 16ம் தேதி மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக தமிழகத்தில் 14ம் தேதி முதல் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.