ஏனையவை

நாடாளுமன்றத்தில் கைகலப்பு: டயானா கமகே வைத்தியசாலையில்

Published

on

நாடாளுமன்றத்தில் கைகலப்பு: டயானா கமகே வைத்தியசாலையில்

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தற்போது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாக்கப்பட்டதாக வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்த பின்னர் இராஜாங்க அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தன்னை தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அவர் தகாத வார்த்தையால் பேசியுள்ள காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டாரவுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தணிக்க முயன்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித்தை டயானா கமகே தாக்க முற்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தான் சபைக்கு வெளியே வைத்து தாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றம்சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் (20.10.2023) விசேட உரையொன்றை ஆற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தன்னை தாக்கியதாகவும் இது தொடர்பில் விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தச் சம்பவத்துடன், பிரதமரின் முன்மொழிவுக்கு இணங்க, நாடாளுமன்ற நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

Exit mobile version