ஏனையவை

ரிஷி சுனக்கின் இடத்தைப் பிடிக்க திரைமறைவில் நடக்கும் வேலை

Published

on

ரிஷி சுனக்கின் இடத்தைப் பிடிக்க திரைமறைவில் நடக்கும் வேலை

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மவுசு குறைந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், அவர் வரும் தேர்தலில் தோல்வியடைந்தால், அவரது இடத்துக்கான போட்டியில் 13 பேர் உள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

2025இல் ரிஷி பிரதமராக இருக்கமாட்டார்
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தேர்தல் நடைபெறுமானால், அதற்குப் பின் ரிஷி பிரித்தானியாவின் பிரதமராக இருக்கமாட்டார் என நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

லேபர் கட்சி பிரித்தானியாவில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது.

அடுத்த பிரதமர் போட்டியில் 13 பேர்
இதற்கிடையில், ரிஷி சுனக்கின் இடத்தைப் பிடிக்க திரைமறைவில் வேலை நடப்பதாகவும், அவரது இடத்துக்கான போட்டியில் 13 பேர், அவரது கட்சியினரே, உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிவருகின்றன.

அவ்வகையில், ரிஷிக்கு பதிலாக பிரதமராவார் என எதிர்பார்க்கப்படும் முதல் நபர், கெமி பேடனாக். கட்சியில் மிகவும் பிரபலமான அமைச்சர் அவர்தான் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அவருக்கு அடுத்தபடியாக அடிபடும் பெயர் லிஸ் ட்ரஸ். அவரைத் தொடர்ந்து, கடுமையான புலம்பெயர்தல் கொள்கைகள் கொண்டவரான உள்துறைச் செயலர் சுவெல்லா பிரேவர்மேன் உள்ளார்.

அடுத்தடுத்த இடங்களில், வெளியுறவுச் செயலரான James Cleverly, Penny Mordaunt, Tom Tugendhat, Grant Shapps, Michael Gove, Priti Patel, Jacob Rees-Mogg, Gillian Keegan, Claire Coutinho, David Fros ஆகியோர் பெயரும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version