ஏனையவை

ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் பொலிசாரைத் தாக்கிய புலம்பெயர்ந்தோர்

Published

on

ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் பொலிசாரைத் தாக்கிய புலம்பெயர்ந்தோர்

பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, பிரான்ஸ் நாட்டு பொலிசாரை புலம்பெயர்வோர் சிலர் தாக்கியுள்ளனர்.

பிரான்சின் Calais பகுதியிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்வோர் சிலரை பிரான்ஸ் நாட்டு பொலிசார் தடுத்துள்ளனர்.

அப்போது புலம்பெயர்வோர் சிலர் பொலிசார் மீது பாறைகளைத் தூக்கி வீசியுள்ளனர். சிலர் கட்டைகளைக் காட்டி பொலிசாரை மிரட்டிவிட்டு படகில் ஏறி பிரித்தானியா நோக்கி புறப்பட்டுள்ளனர்.

பொலிசார் உடலில் அணிந்திருந்த கமெராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. தகவல் பிரித்தானிய தரப்பைச் சென்றடைய, அங்கு தயாராக காத்திருந்த பிரித்தானிய பொலிசார் Salih Abdullah (33) மற்றும் Ahmed Khater (25) என்னும் இருவரைக் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அவர்கள் விதி மீறி பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றது உறுதியானதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் முறையே 14, 12 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அப்துல்லா ஈராக்கையும், அஹமது சூடானையும் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பிரித்தானியாவுக்குள் சிறு படகொன்றில் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 51 பேர் கொண்ட கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version