ஏனையவை
பசு மாடு ஒன்றினை நடத்தி சென்றவர் கைது!!
தற்பொழுது வடமாகாணத்தில் கால்நடைகளை எடுத்து செல்வதற்கு கால்நடை மற்றும் உற்பத்தி சுகாதார திணைக்களம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், அச்சுவேலி தோப்பு பகுதியில் இருந்து ஐந்து சந்தி பகுதிக்கு பசு மாடு ஒன்றினை கால்நடையாக நடத்திக்கொண்டு சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
தற்பொழுது வடமாகாணத்தில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் பரவி வருகின்றது.
இதனை அடுத்து மாகாணங்களுக்கு இடையிலும் பிரதேச செயலகங்களுக்கு இடையிலும் கால்நடைகளை வாகனங்களில் எடுத்து செல்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொலிசாரை ஏமாற்றி, வளர்ப்புகென பொய் கூறி பசு மாடு ஒன்றினை நடத்திக் கொண்டு சென்றமை தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்று இருந்தது.
உப பொலிஸ் பரிசோதகர் ஜெனா தலைமையிலான போலீஸ் குழுவினர் சந்தேகத்துக்கு இடமாக மாட்டினை கொண்டு சென்றவரை விசாரணை செய்த பொழுது எந்த வித தகுந்த ஆதாரங்களும் இன்றி எடுத்துச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது குறித்து பசுமாடு பொலிஸ் நிலையத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது. நடத்திச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் இரண்டாயிரம் ரூபாய் பணத்துக்காக கால்நடைகளை நடத்தி ஐந்து சந்திப் பகுதியில் உள்ள இறைச்சி வியாபாரி ஒருவருக்கு கொடுப்பதனை வழமையாக கொண்டு வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login